For You

10/recent/ticker-posts

ஆன்லைன் மூலம் FMB பதிவிறக்கம் செயதல் Download FMB Online


உங்கள் நிலத்தின் புலப்படம் (FMB) அதாவது நிலத்தின் வரைபடத்தை பார்வையிடவோ அல்லது பிரிண்ட் எடுக்கவோ அரசு அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை உங்கள் மொபைல் அல்லது கம்ப்யூட்டர் மூலமாக ஆன்லைனில் நீங்களே பார்த்துக் கொள்ளலாம்.

புலப்பட(FMB) விபரங்களை அறிந்து கொள்வது எப்படி என்பதை காணலாம்.

https://eservices.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும்.




அதில் நில உரிமை நகல் பார்வையிட என்ற தலைப்பின் கீழ் உள்ள "நில உரிமை (பட்டா & புலப்படம் / சிட்டா/நகர நில அளவைப் பதிவேடு) விவரங்களை பார்வையிட" என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது திரையில் தோன்றும் பக்கத்தில்

உங்கள் மாவட்டத்தை தேர்ந்தெடுக்கவும்.

கிராமப்புறம் என்பதை தேர்ந்தெடுக்கவும்.




சமர்ப்பி என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது திரையில் தோன்றும் பக்கத்தில்






உங்களுடைய வட்டம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுக்கவும்.


நிலத்தின் புலப்படத்தை பார்வையிட



புல எண் என்பதை தேர்ந்தெடுக்கவும்.

உங்களுடைய புல எண் மற்றும் உட்பிரிவு எண் முதலியவற்றை சரியாக உள்ளிடவும்.

பார்வை என்பதில் புலப்படம் என்பதை தேர்ந்தெடுக்கவும்.

கொடுக்கப்பட்டுள்ள அங்கீகார மதிப்பை உள்ளிட்டு சமர்ப்பி என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது உங்களுடைய புலப்படம் திரையில் தோன்றும்.




தேவையானால் பிரிண்ட் செய்து கொள்ளலாம் அல்லது டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


தமிழ் உணர்வுகள் தொடரும்.... 



Post a Comment

0 Comments