உள்ளடக்கத்துக்குச் செல்

இரட்சணிய சேனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
The Salvation Army
வகைப்பாடு Protestant
இறையியல் Holiness movement
இறையியல் Wesleyan
கட்டமைப்பு Quasi-military
தலைவர் GENERAL LYNDON BUCKINGHAM
புவியியல் பிரதேசம் Worldwide
நிறுவனர் General வில்லியம் பூத்
ஆரம்பம் 2 July 1865[1]
London, United Kingdom
பிரிந்தது மெதடிசம்
பிரார்த்தனைக் கூட்டங்கள் 15,409[2]
உறுப்பினர்கள் 1,150,666[2]
மறை பரப்புனர்கள் 26,359[2]
அதிகாரப்பூர்வ இணையத்தளம் www.salvationarmy.org

இரட்சணிய சேனை (The Salvation Army), ஒரு அனைத்துலக் கிறித்தவ நற்செய்தி இயக்கமாகும். இவ்வியக்கம் தற்போது 131 நாடுகளில் இயங்கி வருகிறது. இரட்சணிய சேனை இயக்கத்தின் தலைமைச் செயலகம் இலண்டன் நகரின் குயீன் விக்டோரியா சாலையில் அமைந்துள்ளது.

இவ்வியக்கம் 1865 ஆம் ஆண்டு வில்லியம் பூத், அவரது மனைவி காதரின் பூத் என்பவர்களால் கிழக்கு இலண்டன் அறவியக்கமாக துவக்கப்பட்டது. இவ்வியக்கம் அரை-இராணுவக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது.

இரட்சணிய சேனையின் நிறுவனர் வில்லியம் பூத் அவர்கள் லண்டனில் உள்ள நாட்டிங்காம் என்னுமிடத்தில் 1829 ஆம் ஆண்டு பிறந்தார்.

இரட்சணிய சேனையானது கிறித்தவ சுவிசேஷ இறைப்பணி, மருத்துவப்பணி, கல்விப்பணி, மீட்புப்பணி மற்றும் சமூக சேவை பணிகளை ஏழை எளியவர்களிடத்திலும், திக்கற்றவர்களிடத்திலும் செய்து வருகிறது.

உலகநாடுகளில் பரவிய ஆண்டு விவரம்

[தொகு]

இந்தியாவில் இந்த அமைப்பு 1882 ஆம் ஆண்டிலும் இலங்கையில் 1883 ஆ‌ம் ஆண்டிலும் மலேசியாவில் 1938 ஆம் ஆண்டிலும் நிறுவப்பட்டது. நேபாளத்தில் இந்த அமைப்பு இன்னும் நிறுவப்படவில்லை.

விசுவாச பிரமாணம்

[தொகு]

இரட்சணிய சேனையின் விசுவாசப் பிரமாணம்.

1.பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் அடங்கிய வேதாகமமானது தேவனுடைய ஏவுதலினால் அருளப்பட்ட தென்றும், கிரிஸ்தவ விசுவாசமும், கிரியையுமாகிய தெய்வீகச் சட்டம் அதில் அடங்கியிருக்கிறதென்றும் விசுவாசிக்கிறோம்.

2.எல்லாவற்றிற்கும் சிருஷ்டிகரும், பாதுகாவலரும், ஆளுகிறவரும், சர்வபூரணவபூரணருமான ஒரே தேவன் உண்டென்றும், அவரே மார்க்கீக வணக்கத்திற்குரியவரென்றும் விசுவாசிக்கிறோம்.

3.தத்துவத்தில் பிரியாதவர்களும், வல்லமையிலும், மகிமையிலும், சமமானவர்களுமான பிதா, குமாரன், பரிசுத்தாவியானவராகிய மூவர் தேவத்துவத்தில் உண்டென்றும் விசுவாசிக்கிறோம்.

4.கர்த்தராகிய கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையும் மனிதத் தன்மையும் பொருந்தியிருக்கின்றன வென்றும், அதனால் அவர் மெய்யாகவே  தேவனாகவும், மெய்யாகவே மனிதனாகவும் இருக்கிறாரென்றும் விசுவாசிக்கிறோம்.

5.நமது ஆதிப்பெற்றோர் நிர்மலமான நிலையில் சிருஷ்டுக்கப்பட்டார்களென்றும், ஆனால் அவர்களுடைய கீழ்படியாமையால் தங்களுடைய தூய்மையையும் பாக்கியத்தையும் இழந்தார்கள் என்றும் அதன் பலனாய் எல்லாமனிதரும் பாவிகளாகவும் முற்றிலும் சீரழிந்தவர்களாயும் ஆனார்களென்றும், ஆகையால் தேவனுடைய நியாயமான கோபாக்கினைக்குள்

ளானார்களென்றும் விசுவாசிக்கிறோம்.

6.கர்த்தராகிய இயேசுகிகிறிஸ்து, விருப்பமுள்ளவரெவர்களோ அவர்கள் அனைவரும் இரட்சிக்கப்படும் பொருட்டு, தம்முடைய பாடு மரணத்தால் உலகம் முழுவதற்கும் வேண்டிய பிராயச்சித்தப் பலியானாரென்றும் விசுவாசிக்கிறோம்.

7.தேவனுக்கு முன் மனஸ்தாபமும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசமும், பரிசுத்தாவியானவராலுண்டாகும் மறுபிரப்பும் இரட்சிப்புக்கு அவசியமென விசுவாசிக்கிறோம்.

8.கர்த்தராகிய கிரிஸ்து இயேசுவிலுள்ள விசுவாசத்தின் மூலம் அவருடைய கிருபையினால் நீதிமான்களாக்கப்படுகிறோம் என்றும், அவரில் விசுவாசிக்கிறவன் தன்னிலே அந்த சாட்சியை உடையவனாய் இருக்கிறானென்றும் விசுவாசிக்கிறோம்.

9.இரடசிப்பில் நிலைத்திருப்பது கிறிஸ்துவில் உள்ள தொடர்பான விசுவாசத்திலும், கீழ்ப்படிதலிலும் சார்ந்திருக்கிறதென்று விசுவாசிக்கிறோம்.

10.முற்றிலும் சுத்திகரிக்கப்பட்டிருந்தல், விசுவாசிகள் யாவருடைய சிலாக்கியமாயிருக்கிற தென்றும், அவர்களுடைய ஆவி, ஆத்துமா,  சரீரம் முழுவதும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை மட்டும் குற்றமற்றதாய்க் காக்கப்படக் கூடுமென்றும் விசுவாசிக்கிறோம்.

11.ஆத்துமாவின் அழியாமையிலும், சரீரத்தின் உயிர்த்தெழுதலிலும், உலக முடிவிலுண்டாகும் பொதுவான நியாயத் தீர்பிலும், நீதிமான்களுடைய நித்திய ஆனந்தத்திலும், துன்மார்கருடைய நித்திய ஆனந்தத்திலும், துன்மார்க்கருடைய நித்திய ஆக்கினையிலும் நாம் விசுவாசிக்கிறோம்.

  1. http://www.salvationarmy.org/ihq/news/inr020714
  2. 2.0 2.1 2.2 "Statistics". The Salvation Army International. 2018. Archived from the original on 14 March 2018. பார்க்கப்பட்ட நாள் 29 March 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்சணிய_சேனை&oldid=4043750" இலிருந்து மீள்விக்கப்பட்டது