உள்ளடக்கத்துக்குச் செல்

சே. டி. வேன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சே. டி. வேன்சு
JD Vance
ஒகையோ மாநிலத்துக்கான மூப்பவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
சனவரி 3, 2023
முன்னையவர்ரொப் போர்ட்மேன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சேம்சு தொனால்டு போவ்மேன்

ஆகத்து 2, 1984 (1984-08-02) (அகவை 40)
மிடில்டவுன், ஒகையோ, ஐ.அமெரிக்கா
அரசியல் கட்சிகுடியரசுக் கட்சி
துணைவர்
உசா வான்சு (தி. 2014)
பிள்ளைகள்3
கல்வி
கையெழுத்து
இணையத்தளம்மூதவை இணையதளம்
Military service
கிளை/சேவைஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு
சேவை ஆண்டுகள்2003–2007
தரம்கோர்ப்பரல்
அலகு2வது கடல்சார் விமானப் பிரிவு
போர்கள்/யுத்தங்கள்ஈராக் போர்

சேம்சு தாவிது வேன்சு (James David Vance, பிறப்பு: 2 ஆகத்து 1984) அமெரிக்க எழுத்தாளர், தொழில் முனைவோர், அரசியல்வாதி, வழக்குரைஞர் என்ற பன்முகத்தன்மை கொண்டவர். இவர் அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவில் பணியாற்றி பின் ஒகையோ சார்பில் 2023-இல் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்க மூப்பவையில் பணியாற்றுகிறார். குடியரசுக் கட்சியை சேர்ந்த இவர் 2024 தேர்தலில் தொனால்டு திரம்பினால் துணை அரசுத்தலைவர் வேட்பாளராக 2024 யூலை 15 அன்று அறிவிக்கப்பட்டார்.[1][2] ஈரூடகப்படைப்பிரில் பணிபுரிந்த ஒருவர் கட்சி சார்பில் துணை அரசுத்தலைவராக அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

ஒகையோவிலுள்ள மிடில்டவுன் உயர்நிலைப்பள்ளியில் படித்து முடித்தவுடன் வேன்சு 2003 முதல் 2007 வரையான காலகட்டத்தில் போர் செய்தியாளராக பணிபுரிந்தார். அக்காலகட்டத்தில் ஆறு மாதம் ஈராக்கிலும் பணியாற்றினார். அதன் பின் ஒகையோ மாநில பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தை 2009இல் பெற்றார் பின்பு 2013இல் யேல் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து பட்டம் பெற்றார். தனது நினைவுகளை தொகுத்து கில்பில்லி எலெசி என்ற நூலை எழுதினார். இது நியுயார்க் டைம்சு நாளிதழின் அதிகம் விற்பனையாகும் நூல் என்று 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்நூல் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்தது. இந்நூலை அடிப்படையாக கொண்டு 2020 ஆம் ஆண்டு கில்பில்லி எலெசி என்ற பெயரிலேயே திரைப்படமும் வெளியானது. 2021 ஆம் ஆண்டு அரசியலில் பங்கெடுத்து குடியரசு கட்சியின் சார்பாக போட்டியிட்டு சனநாயக கட்சியின் டிம் ரெயானை தோற்கடித்து ஒகையோ மாநிலத்துக்கான செனட்டராக அமெரிக்க செனட்டுக்கு 2022 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 ஆமெ ஆண்டு தேர்தலின் போது தொனால்டு திரம்பை கடுமையாக எதிர்த்த வேன்சு பின்பு தீவிர ஆதரவாளராக மாறினார்.

ஒகையோவிலுள்ள மிடில்டவுன் உயர்நிலைப்பள்ளியில் படித்து முடித்தவுடன் வேன்சு 2003 முதல் 2007 வரையான காலகட்டத்தில் போர் செய்தியாளராக பணிபுரிந்தார். அக்காலகட்டத்தில் ஆறு மாதம் ஈராக்கிலும் பணியாற்றினார். அதன் பின் ஒகையோ மாநில பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தை 2009இல் பெற்றார் பின்பு 2013இல் யேல் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து பட்டம் பெற்றார். தனது நினைவுகளை தொகுத்து கில்பில்லி எலெசி என்ற நூலை எழுதினார். இது நியுயார்க் டைம்சு நாளிதழின் அதிகம் விற்பனையாகும் நூல் என்று 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்நூல் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்தது. இந்நூலை அடிப்படையாக கொண்டு 2020 ஆம் ஆண்டு கில்பில்லி எலெசி என்ற பெயரிலேயே திரைப்படமும் வெளியானது. 2021 ஆம் ஆண்டு அரசியலில் பங்கெடுத்து குடியரசு கட்சியின் சார்பாக போட்டியிட்டு சனநாயக கட்சியின் டிம் ரெயானை தோற்கடித்து ஒகையோ மாநிலத்துக்கான செனட்டராக அமெரிக்க செனட்டுக்கு 2022 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 ஆமெ ஆண்டு தேர்தலின் போது தொனால்டு திரம்பை கடுமையாக எதிர்த்த வேன்சு பின்பு தீவிர ஆதரவாளராக மாறினார். 2024 யூலை 15 அன்று வென்சு குடியரசுக்கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக அதிபர் பதவிக்கு போட்டியிடும் தொனால்டு திரம்பு அறிவித்தார். அமெரிக்க ஈரூடைப் படைப்பிரிவிலிருந்து துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முதலாவது ஆள் இவர் தான்.

குமுதாய விதயங்களில் வென்சு பழுமைவாதி. இவர் கருக்கலைப்பிற்கும் ஓரின பால் சேர்க்கைக்கும் எதிரான நிலைப்பாடு உடையவர். துப்பாக்கி வைத்துக்கொள்ள கட்டுப்பாடு விதிப்பதை எதிர்ப்பவர். மாறிய பாலின சிறார்களுக்கு சுகாதார பராமரிப்பை ஆர்கன்சாசு மாநிலம் தடை செய்ததை ஆதரித்தார்.[3] வரி, பங்கு சந்தையில் தலையிடுதல், மணிக்கு குறைந்த அளவு ஊதியம், காப்புரிமை, தொழிற்சங்கம் அமைத்தல் போன்றவற்றில் பொதுப்போக்கு குடியரசு கட்சியினரிடம் இருந்து மாறுபடுகிறார். [4][5][6][7] உக்ரைனுக்கான அமெரிக்க இராணுவ உதவியை எதிர்க்கிறார்


மேற்கோள்கள்

[தொகு]
  1. Alison Main. "Trump selects Ohio Sen. JD Vance as his running mate". CNN. Archived from the original on July 15, 2024. பார்க்கப்பட்ட நாள் July 15, 2024.
  2. "Ohio Sen. JD Vance announced as Donald Trump's 2024 vice presidential running mate". USA Today. Archived from the original on July 15, 2024. பார்க்கப்பட்ட நாள் July 15, 2024.
  3. 5 Excerpts From JD Vance’s Emails to a Transgender Classmate
  4. Stein, Jeff (July 15, 2024). "J.D. Vance pick unnerves GOP's business elite, thrills populists". The Washington Post இம் மூலத்தில் இருந்து July 16, 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240716044832/https://www.washingtonpost.com/business/2024/07/15/vance-trump-economy-gop/. 
  5. "What would a Trump-Vance economic agenda look like?". www.ft.com. பார்க்கப்பட்ட நாள் 2024-07-21.
  6. Staff (July 15, 2024). "Bash the banks, maybe raise taxes: Inside Vance's policy agenda". Politico. Archived from the original on July 15, 2024. பார்க்கப்பட்ட நாள் July 16, 2024.
  7. Guida, Victoria (2024-07-16). "The Trump-Vance Ticket is a Repudiation of Free-Market Conservatism". Politico. பார்க்கப்பட்ட நாள் 2024-07-21.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சே.டி.வான்சு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சே._டி._வேன்சு&oldid=4063682" இலிருந்து மீள்விக்கப்பட்டது