சுகோய் எஸ்யு-27
எஸ்யு-27 Su-27 | |
---|---|
எஸ்யு-27 (2005) | |
வகை | பன்முகச் சண்டை வானூர்தி |
உருவாக்கிய நாடு | சோவியத் ஒன்றியம்/உருசியா |
வடிவமைப்பாளர் | சுகோய் |
முதல் பயணம் | 20 மே 1977 |
அறிமுகம் | 22 சூன் 1985 |
தற்போதைய நிலை | பயன்பாட்டில் உள்ளது |
முக்கிய பயன்பாட்டாளர் | உருசிய வான் படை |
உற்பத்தி | 1982–2010 |
தயாரிப்பு எண்ணிக்கை | 680[1] |
மாறுபாடுகள் | சுகோய் எஸ்யு-30 சுகோய் எஸ்யு-35 |
சுகோய் எஸ்யு-27 என்பது ஒரு மீயொலிவேக பன்முகச் சண்டை வானூர்தியாகும். இது உருசிய நாட்டின் சுகோய் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்ற இரட்டைப் பொறி கொண்ட நான்காம் தலைமுறை சண்டை வானூர்தியாகும். பன்முகச் சண்டை வானூர்தியான இது வான் ஆளுமை, இடைமறிப்பு ஆகிய நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்த முடியும்.[2][3]
1985 இல் சோவியத் வான்படையில் இந்த வானூர்தி அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்க குண்டுவீசும் வானூர்திகளுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கவும், சோவியத் கடற்கரை பகுதிகளை எதிரி நாடு வானூர்தி தாங்கிக் கப்பல்களிடமிருந்து பாதுகாக்கவும் இவை பயன்படுத்தப்பட்டன. மேலும் சோவியத் வான்படையின் கனரக படைத்துறை வானூர்திகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும் இவை செயல்படுத்தப்பட்டன.[4] பின்னாட்களில் இந்த வானூர்தியை மையமாக கொண்டு சுகோய் எஸ்யு-30 மற்றும் சுகோய் எஸ்யு-35 போன்ற பல வானூர்திகள் உருவாக்கப்பட்டன.
விவரக்குறிப்புகள்
[தொகு]தரவு எடுக்கப்பட்டது: [5][6][7][8]
பொது இயல்புகள்
- குழு: 1
- நீளம்: 21.9 m (71 அடி 10 அங்)
- இறக்கை விரிப்பு: 14.7 m (48 அடி 3 அங்)
- உயரம்: 5.92 m (19 அடி 5 அங்)
- இறக்கைப் பரப்பு: 62 m2 (670 sq ft)
- வெற்றுப் பாரம்: 16,380 kg (36,112 lb)
- மொத்தப் பாரம்: 23,430 kg (51,654 lb)
- தரையிலிருந்து தூக்கக் கூடிய பாரம்: 30,450 kg (67,131 lb)
- எரிபொருள் கொள்ளவு: 9,400 kg (20,723.5 lb)
- சக்தித்தொகுதி: 2 × சாட்டர்ன் ஏஎல்31எப் தாரை பொறி (பின்னெரியுடன்), 75.22 kN (16,910 lbf) உந்துதல் தலா
செயற்பாடுகள்
- அதிகபட்ச வேகம்: 2,500 km/h (1,553 mph; 1,350 kn)
- அதிகபட்ச வேகம்: மாக் 2.35
- வரம்பு: 3,530 km (2,193 mi; 1,906 nmi)
- உச்சவரம்பு 19,000 m (62,336 அடி)
- ஈர்ப்பு விசை வரம்பு: +9
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Russia Air Force Handbook. World Strategic and Business Information Library. Washington, D.C.: International Business Publications USA. 2009. p. 167. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4387-4019-5.
- ↑ "Sukhoi Su-27SK Flanker-B". U.S.-China Economic and Security Review Commission. 2004. Archived from the original on 29 April 2007.
- ↑ Pike, John (March 11, 1999). "Su-37". Federation of American Scientists. Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 21 March 2015.
- ↑ Kopp, Dr. Carlo (May 1990). "Fulcrum and Flanker: The New Look in Soviet Air Superiority". Australian Aviation 1990 (May). http://www.ausairpower.net/Profile-Fulcrum-Flanker.html. பார்த்த நாள்: 5 March 2015.
- ↑ "Su-27SK: Aircraft Performance". Sukhoi. Archived from the original on 16 July 2011.
- ↑ "Sukhoi Su-27SKM single-seat multirole fighter". KnAAPO. Archived from the original on 2013-10-08.
- ↑ "Su-27". Deagel.com. Archived from the original on 30 June 2017.
- ↑ "Su-27 Flanker Front-Line Fighter Aircraft, Russia". Airforce-Technology.com. 16 July 2021. Archived from the original on 3 July 2017.