டென்சிங் நோர்கே
டென்சிங் நோர்கே Tenzing Norgay | |
---|---|
டென்சிங் | |
பிறப்பு | மே, 1914 கார்த்தா பள்ளத்தாக்கு, திபெத் |
இறப்பு | 9 மே 1986 டார்ஜீலிங், இந்தியா | (அகவை 71)
பணி | மலையேறி, வழிகாட்டி |
வாழ்க்கைத் துணை | டாவா பூட்டி, ஆங் லாமு, டாக்கு |
பிள்ளைகள் | பெம் பெம், நீமா, ஜாம்லிங், நோர்பு |
டென்சிங் நோர்கே (Tenzing Norgay, (மே 29 1914 – மே 9, 1986)), நேபாள மற்றும் திபெத்திய மலையேறுநர் ஆவார். இவர் பொதுவாக ஷேர்ப்பா டென்சிங் எனவே அழைக்கப்படுகிறார். இவர் மே 29, 1953 இல் நியூசிலாந்தின் சேர் எட்மண்ட் ஹில்லரியுடன் இணைந்து எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை முதன் முதலில் அடைந்து சாதனை படைத்தார்.பின்னாட்களில் இந்தியக் குடியுரிமை பெற்று டார்ஜிலிங்கில் குடியேறினார். [1]
விருதுகள்
[தொகு]- 1953 இல் இரண்டாம் எலிசபெத்திடம் இருந்து ஜோர்ஜ் விருதைப் பெற்றார்.
- நேபாள மன்னர் திரிபுவன் வழங்கிய நேபாளத்தின் நட்சத்திர விருதை 1953ல் வழங்கினார்.
- 1959 இல் இந்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கியது.
- 1978 இல் இவரது நினைவாக இந்திய அரசு டென்சிங் நோர்கே விருதினை அறிவித்தது.
நேருவின் உபசரிப்பு
[தொகு]டென்சிங்கை தனது வீட்டிற்கு அழைத்த நேரு தன்னிடம் இருந்த விலையுயர்ந்த ஆடைகளை அவருக்குக் கொடுத்து, அவற்றை அணியச்செய்து அழகு பார்த்தார்.டென்சிங்கின் கோரிக்கையை ஏற்று 1954-ல் மலையேறும் கழகத்தைத் தொடங்கி வைத்தார் நேரு.அதில் டென்சிங் பயிற்சியாளரானார். டென்சிங் 1986-ல் தனது 71-வது வயதில் டார்ஜிலிங்கில் காலமானார்.[2]
ஜம்லிங் டென்சிங்
[தொகு]டென்சிங் நார்கேயின் மகனான ஜம்லிங் டென்சிங் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டு, 1996 ல் எவரெஸ்ட் மலை உச்சியை அடைந்து, தந்தையின் சாதனையைத் தானும் செய்து காட்டினார்.
குறிப்புகள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Article பரணிடப்பட்டது 2007-04-14 at the வந்தவழி இயந்திரம் on Tenzing from Royal Geographical Society
- Entry from people database
- Tenzing Norgay Adventures பரணிடப்பட்டது 2005-09-11 at the வந்தவழி இயந்திரம்
- [1] பரணிடப்பட்டது 2009-01-21 at the வந்தவழி இயந்திரம் Tenzing Norgay's Disputed Nationality