தெற்கு அரைக்கோளம்
Appearance
தெற்கு அரைக்கோளம் (Southern Hemisphere[1]) என்பது நில நடுக்கோட்டின் தென்பகுதியில் உள்ள புவியின் அரைக்கோளமாகும்.
புவியின் தெற்கு அரைக்கோளத்தில் நான்கு கண்டங்கள் முழுமையாகவோ,பகுதியாகவோ,(அண்டார்டிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்காவின் பகுதி, ஆப்பிரிக்காவின் பகுதி) நான்கு பெருங்கடல்கள் (தென் அட்லாண்டிக், இந்திய, தென் பசிபிக் மற்றும் தென்முனை), பெரும்பான்மையான ஓசியானியாஅடங்கியது. ஆசியா கண்டத்து பல தீவுகளும் தெற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ளன. புவியின் ஓட்டப்பாதையின் சாய்வு காரணமாக வேனில் காலம் திசம்பர் 21 முதல் மார்ச் 21 வரையும் கூதிர் காலம் சூன் 21 முதல் செப்டம்பர் 21 வரையிலும் உணரப்படுகிறது.செப்டம்பர் 22 வேனிற்கால சம இரவு நாள் மற்றும் மார்ச் 21 கூதிர்கால சம இரவு நாள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Merriam Webster's Online Dictionary (based on Collegiate vol., 11th ed.) 2006. Springfield, MA: Merriam-Webster, Inc.