உள்ளடக்கத்துக்குச் செல்

த வேர்ல்டு ஃபக்ட்புக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த வேர்ல்டு ஃபக்ட்புக் (உலகத் தகவல் புத்தகம்)
த வேர்ல்டு ஃபக்ட்புக்கின் புத்தக அட்டை (2011 பதிப்பு).
நூலாசிரியர்நடுவண் ஒற்று முகமை
மொழிஆங்கிலம்
பொருண்மைவரலாறு
வகைநாடுகள் பற்றிய தொகுப்பு
வெளியீட்டாளர்இயக்குநர்
ISBNபார்க்க ஐ.எஸ்.பி.என் பட்டியல்

த வேர்ல்டு ஃபக்ட்புக் (The World Factbook, ஐ.அஸ்.அஸ்.என். 1553-8133) அல்லது சி.ஐ.ஏ. உலகத் தகவல் புத்தகம் என்பது ஐக்கிய அமெரிக்காவின் நடுவண் ஒற்று முகமையின் மூலம் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஒரு தொகுப்புப் புத்தகமாகும்.[1] இதன் அச்சுப் பிரதிகள் தேசிய தொழில்நுட்ப தகவல் சேவை(அமெரிக்க) மற்றும் அரசு அச்சு அலுவலகத்திலும்(அமெரிக்க) கிடைக்கிறது. மேலும் ஸ்கைஹார்ஸ் போன்ற இதர பதிப்பக நிறுவனங்களிலும் கிடைக்கிறது. பயனர்கள் எளிதில் தரவிறக்கிப் பயன்படுத்த இணையத்திலும் இதன் மென்பிரதி கிடைக்கிறது. இப்புத்தகம் பொதுவாக மக்கள் வகைப்பாடு, புவியியல், தகவல்தொடர்பியல், அரசாங்கம், பொருளியல், மற்றும் அமெரிக்கா உட்பட இராணுவம் பற்றிய தகவல்களைக் கொண்டிருக்கிறது. ஐக்கிய அமெரிக்க அரசின் தேவைகளுக்காக தகுந்த முறையில் இந்த தகவல்களைத் திரட்டப்பட்டு காப்புரிமையின்றி பொதுக் களத்தில் வைக்கப்படுகிறது. தற்போது இரண்டு வாரத்திற்குவொரு முறை இணையதளம் புதுப்பிக்கப்படுகிறது.

த வேர்ல்டு ஃபக்ட்புக் 2010ன் இணையதள தோற்றம்

பதிப்புரிமை

[தொகு]

பொதுக் களத்தில் வைக்கப்பட்டுள்ளதால், இப்புத்தகத்திற்கு பதிப்புரிமை இல்லை. அதனால் இதன் தகவல்களை யாரும் பயன்படுத்தவோ, மேம்படுத்தி பயன்படுத்தையோ தடையில்லை.[2] இருந்தாலும் இப்புத்தகத்தின் பெயரை மேற்கோளில் சுட்டிக்காட்ட விரும்புகிறது. 1949 நடுவண் ஒற்று முகமை சட்டப்படி, இதன் உத்தியோகப்பூர்வ முத்திரையை அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது.

பன்னாட்டுத் தரப்புத்தக எண்கள்

[தொகு]

பன்னாட்டுத் தரப்புத்தக எண் பட்டியல்கள்[3]

அரசு பதிப்புகள்
பொடொமக்(Potomac) மறுபதிப்புகள்
ஸ்கைஹார்ஸ் பதிப்பகத்தின் மறுபதிப்புகள்

References

[தொகு]

 This article incorporates public domain material from websites or documents of the த வேர்ல்டு ஃபக்ட்புக்.

  1. Directorate of Intelligence. "The World Factbook - Contributors and Copyright Information". Archived from the original on 2013-05-13. பார்க்கப்பட்ட நாள் 2006-09-23. The World Factbook is prepared by the Central Intelligence Agency for the use of US Government officials, and the style, format, coverage, and content are designed to meet their specific requirements. Information is provided by ... other public and private sources. The Factbook is in the public domain. Accordingly, it may be copied freely without permission of the Central Intelligence Agency (CIA).
  2. The ISBN for each edition can be found on the Government Printing Office Bookstore website.

வெளியிணைப்புகள்

[தொகு]

த வேர்ல்டு ஃபக்ட்புக்கின் நகர்பேசி பதிப்புகள்

[தொகு]

ஆண்டுகள் வாரியான புத்தகம்

[தொகு]
  • 28 ஆண்டுகளின் தொகுப்புகள் (1982–2011)
  • த வேர்ல்டு ஃபக்ட்புக்கின் முந்தைய பதிப்புகள் மிசூரி பல்கலைக் கழகத்தின் ஆவணக் காப்பகத்திலிருந்து:
1992 பரணிடப்பட்டது 2008-06-11 at the வந்தவழி இயந்திரம், 1993 பரணிடப்பட்டது 2008-07-05 at the வந்தவழி இயந்திரம், 1994 பரணிடப்பட்டது 2008-07-09 at the வந்தவழி இயந்திரம், 1995 பரணிடப்பட்டது 2008-06-20 at the வந்தவழி இயந்திரம், 1996 பரணிடப்பட்டது 2008-10-01 at the வந்தவழி இயந்திரம், 1997 பரணிடப்பட்டது 2008-07-19 at the வந்தவழி இயந்திரம், 1998 பரணிடப்பட்டது 2008-10-01 at the வந்தவழி இயந்திரம், 1999 பரணிடப்பட்டது 2008-10-01 at the வந்தவழி இயந்திரம், 2000, 2001 பரணிடப்பட்டது 2008-06-15 at the வந்தவழி இயந்திரம், 2002 பரணிடப்பட்டது 2008-05-26 at the வந்தவழி இயந்திரம், 2003 பரணிடப்பட்டது 2008-06-15 at the வந்தவழி இயந்திரம், 2004 பரணிடப்பட்டது 2008-06-15 at the வந்தவழி இயந்திரம், 2005 பரணிடப்பட்டது 2008-05-13 at the வந்தவழி இயந்திரம், 2006 பரணிடப்பட்டது 2012-12-05 at Archive.today, 2007 பரணிடப்பட்டது 2008-06-12 at the வந்தவழி இயந்திரம், 2008 பரணிடப்பட்டது 2012-08-05 at Archive.today
"https://ta.wikipedia.org/w/index.php?title=த_வேர்ல்டு_ஃபக்ட்புக்&oldid=3792156" இலிருந்து மீள்விக்கப்பட்டது