உள்ளடக்கத்துக்குச் செல்

பெண் (பால்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உரோமைப் பெண் கடவுள் வீனசின் சின்னம் பெண் பாலினத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

பெண் (Female, ♀) என உயிரினங்களில் அல்லது உயிரினப் பகுதிகளில் இடம் மாறா சூல் முட்டைகளை (முட்டை கலங்கள்) உருவாக்கும் பால் குறிக்கப்படுகிறது.

வரையறைப் பண்புகள்

[தொகு]

பல்மடிய இனப்பெருக்கத் தொகுதியில் பெரிய பாலணு சூல் முட்டை என்றும் சிறிய, பொதுவாக இடம் பெயரும் பாலணு, விந்தணு, எனவும் அழைக்கப்படுகிறது. சூல் முட்டை பெண்ணாலும் விந்தணு ஆணாலும் உருவாக்கப்படுகிறது. பெண் தனியனால் ஆணின் பாலணுக்கள் இல்லாது (கன்னிப்பிறப்பு தவிர்த்து) கலவிமுறை இனப்பெருக்கம் செய்யவியலாது. சிலவகை உயிரினங்களால் கலவிமுறை இனப்பெருக்கம் மற்றும் கலவியற்ற இனப்பெருக்கம் ஆகிய இருமுறைகளிலும் இனப்பெருக்கம் செய்ய முடியும்.

பல்வேறு இனங்களில் இந்தப் பாலின வேறுபாட்டிற்கு மரபியல் சார்ந்த தனிக் காரணங்கள் ஏதுமில்லை. வெவ்வேறு கூர்ப்புப் பரம்பரைகளில் தனித்தனியே இரு பாலினங்கள் பலமுறை கூர்ந்துள்ளன. கலவிமுறை இனப்பெருக்கத்தின் சில அமை முறைகள்:

  • ஒரே போல வடிவமும் பண்பும் கொண்ட, ஆனால் மூலக்கூற்றளவில் மாறுபட்ட பாலணுக்களுடைய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இணையும் வகைகள் கொண்ட இனங்கள் (isogamous species),
  • ஆண் மற்றும் பெண் வகை பாலணுக்கள் கொண்ட இனங்கள் (anisogamous species),
  • ஆண் பாலணுவை விட பெரிய, நகரவியலாத பெண் பாலணுவைக் கொண்ட இனங்கள் (oogamous species). இத்தகைய அமை முறை இயல்புத் தடைகளால் உருவானதாக கருத்து உள்ளது.[1]

பாலூட்டிகளில் பெண்ணினம்

[தொகு]

பாலூட்டி வகுப்பின் சிறப்புப் பண்பாக பால்மடிச் சுரப்பிகள் அமைந்துள்ளன. வியர்வைச் சுரப்பிகள் பால்மடிச்சுரப்பிகளாக மாற்றியமைக்கப்பட்டு பால் சுரக்கிறது; இந்தப் பால் பிறந்த சிசுவிற்கு பிறந்ததிலிருந்து சில நாட்களுக்கு உணவு வழங்கப் பயனாகிறது. பாலூட்டிகள் மட்டுமே பாலைத் தயாரிக்கின்றன. மனித இனப் பெண்களில் மிகக்கூடுதலான கொழுப்பிழையத்தை முலைகளாகக் கொண்டிருப்பதால் பால்மடிச் சுரப்பிகள் மனிதர்களில் மிகவும் வெளிப்படையானது. அனைத்து பாலூட்டிகளிலும் பால்மடிச்சுரப்பிகள் அமைந்துள்ள போதும் ஆண் இனங்களில் இவை எச்ச உறுப்புக்களாக விளங்குகின்றன.

பாலூட்டி பெண்ணினம் எக்சு நிறப்புரியின் இரண்டு படிகளைக் கொண்டுள்ள வேளையில் ஆணினம் ஒரே ஒரு எக்சையும் ஒரு சிறிய ஒய் நிறப்புரியையும் கொண்டுள்ளது. இதனால் ஏற்படும் உருவளவு வேறுபாட்டை ஈடுகட்ட பெண்ணினத்தின் எக்சு நிறப்புரியில் ஒன்று ஒழுங்கற்று ஒவ்வொரு கலத்திலும் செயலிழக்கப் படுகிறது. பறவைகளிலும் ஊர்வனவற்றிலும், மாறாக, பெண்ணினம் இருவேறு பாலினக் குறியீட்டு நிறப்புரிகளை (Z மற்றும் W) கொண்டிருக்க ஆண் இனங்கள் இரு Z நிறப்புரிகளைக் கொண்டுள்ளது.

பாலூட்டிப் பெண் இனங்கள் உயிருள்ள குட்டிகளைப் பிரசவிக்கின்றன. சில பாலூட்டிகளல்லாத இனங்களிலும், குப்பி மீன், ஒத்த இன்னப்பெருக்கத்தொகுதி உள்ளது. மேலும் சில பாலூட்டிகளல்லாத இனங்களில், சுறா மீன், முட்டைகள் அவற்றின் உடலிலேயே குஞ்சு பொரிக்கப்பட்டு வெளி வருவது உயிருள்ள குட்டிகளை பெறுவதற்கு ஒத்ததாக காட்சியளிக்கிறது.

மேலும் காண்க

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பெண்கள்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஆதாரங்கள்

[தொகு]

Ayers, Donald M. English Words from Latin and Greek Elements. Second Edition. 1986. University of Arizona Press. United States.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dusenbery, David B. (2009). Living at Micro Scale, Chapter 20. Harvard University Press, Cambridge, Mass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-03116-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்_(பால்)&oldid=3704400" இலிருந்து மீள்விக்கப்பட்டது