பெப்ரவரி 30
பெப்ரவரி 30 சில நாள்காட்டிகளில் குறிக்கப்படுகிறது. எனினும், கிரெகொரியின் நாட்காட்டியில் பெப்ரவரிக்கு 28 அல்லது 29 நாட்களே உள்ளன.
சுவீடனின் நாட்காட்டி
[தொகு]சுவீடன் பேரரசு (அந்நாளில் பின்லாந்து உள்ளடக்கியிருந்தது) 1700 ஆம் ஆண்டில் ஜூலியன் நாட்காட்டியிலிருந்து கிரெகொரியின் நாட்காட்டிக்கு மாற அதனைக் கடைபிடிக்க அடுத்த 40 ஆண்டுகளுக்கு நெட்டாண்டு நாளை விடுவிக்க திட்டமிட்டிருந்தனர். அதன்படி 1700 பெப்ரவரியில் விடுவித்திருந்தாலும் பெரும் வடக்குப் போரின் கவனத் திருப்பலால் 1704 மற்றும் 1708 ஆண்டுகளில் அவ்வாறு செய்ய மறந்து நெட்டாண்டு நாட்களாகவே வைத்திருந்தனர். குழப்பங்களையும் மேலும் எழும் தவறுகளைத் தவிர்க்கவும், அந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஒரு நாள் கூட்டப்பட்டு பெப்ரவரி 30 உருவானது. ஜூலியன் நாட்காட்டியில் அது பெப்ரவரி 29 இற்கும் கிரெகொரியின் நாட்காட்டியில் அது மார்ச் 11 இற்கும் இணையானதாகும். பின்னர் 1753-இல் பெப்ரவரியின் கடைசி பதினோரு நாட்களை விடுவித்து இறுதியாக சுவீடன் கிரெகொரியின் நாட்காட்டிக்கு மாறியது.
சோவியத் நாட்காட்டி
[தொகு]மிகுதியான செய்திகள் சோவியத் கூட்டாட்சியில் 1929 - 1940 கால கட்டத்தில் 30 நாட்கள் கொண்ட மாதங்கள் வழமையிலிருந்ததாகக் கூறினாலும், மற்ற செய்திகளிலிருந்தும் கிடைத்த அந்த கால நாட்காட்டி தாள்களையும் கொண்டும் பார்க்கையில் அங்கு கிரெகோரியின் நாட்காட்டியே வழக்கில் இருந்ததாகத் தெரிகிறது. அதனால் சோவியத் நாட்காட்டியில் பெப்ரவரி 30 இருந்ததில்லை. .[1]
- 1950 – மு. க. அழகிரி, தமிழக அரசியல்வாதி
ஆரம்ப ஜூலியன் நாட்காட்டி
[தொகு]கிமு 45 மற்றும் கிமு 8 இடைப்பட்ட காலகட்டங்களில் 13ம் நூற்றாண்டு அறிஞர் சாக்ரோபோஸ்கோவின் கூற்றுப்படி ஜூலியன் நாட்காட்டியில் பெப்ரவரிக்கு நெட்டாண்டுகளில் 30 நாட்கள் இருந்தன; பின்னரே தனது வளர்ப்பு தந்தை ஜூலியஸ் சீசர் நினைவாக பெயர் கொண்ட சூலை மாதம் 31 நாட்களைக் கொண்டிருந்ததைப் போல தன் பெயர் கொண்ட ஆகஸ்ட் மாதமும் 31 நாட்களைக் கொண்டிருத்தல் வேண்டும் என அகஸ்ட்டஸ் சீசர் பெப்ரவரியின் நீளத்தைக் குறைத்தான் என்பது 13ஆம் நூற்றாண்டு அறிஞர் சாக்ரோபோஸ்கோவின் கூற்று. இருப்பினும் வரலாற்று ஆதாரங்கள் இக்கூற்றை, அலெக்சாண்டரின் நாட்காட்டியுடன் ஒரு நாளுக்கு இரு தேதிகள் செய்தி உள்ளிட, மறுக்கின்றன[2]. ஜூலியன் நாட்காட்டியில் இது தொடர்புள்ள செய்தியையும் பார்க்கவும்.
செயற்கை நாட்காட்டிகள்
[தொகு]சில செயற்கையான நாட்காட்டிகள் கூட பெப்ரவரிக்கு 30 நாட்கள் கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக, வானிலை பற்றிய முன்மாதிரியில் புள்ளிவிவரங்களை எளிதாக்க 30 நாட்கள் கொண்ட 12 மாதங்கள் எடுத்துக்கொள்ளப்படலாம். இது ஒரு எடுத்துக்காட்டு: பொது சுழற்சி முன்மாதிரி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 30 நாட்கள் கொண்ட மாதங்கள் குறித்த முழுமையான செய்திப் பட்டியலுக்கு சோவியத் நாட்காட்டியைப் பார்க்கவும்..
- ↑ ரோஸ்கோ லமோன்ட், "ரோமன் நாட்காட்டியும் ஜூலியஸ் சீசரின் சீர்திருத்தங்களும்", Popular Astronomy 27 (1919) 583–595. சாக்ரோபோஸ்கோவின் கூற்று 585–587 பக்கங்களில் விவாதிக்கப்பட்டுள்ளது.
துணை நூல்கள்
[தொகு]Blackburn, Bonnie; Holford-Strevens, Leofranc (1999). ஆகஸ்போர்ட் ஆண்டுக்கான துணைவன். ஆக்ஸ்போர்ட் பல்கலை அச்சகம். pp. 98-99. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-214231-3.
வெளி இணைப்புகள்
[தொகு]- இயற்கையாளர் பஞ்சாங்கம் பெப்ரவரி 30 பரணிடப்பட்டது 2010-10-10 at the வந்தவழி இயந்திரம்
- பெப்ரவரி 1712யில் 30 நாட்கள் பரணிடப்பட்டது 2012-03-03 at the வந்தவழி இயந்திரம்
- நாட்காட்டியில் மாற்றங்கள் - சுவீடன் பரணிடப்பட்டது 2001-04-18 at the வந்தவழி இயந்திரம்