புதுவை இரத்தினதுரை
புதுவை இரத்தினதுரை | |
---|---|
பிறப்பு | வரதலிங்கம் இரத்தினதுரை திசம்பர் 3, 1948 புத்தூர், யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை |
புனைபெயர் | வியாசன் |
தொழில் | கவிஞர், சிற்பம் |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
வகை | தமிழ்த் தேசியம் |
கருப்பொருள் | கவிதை, புரட்சிப் பாடல்கள் |
இலக்கிய இயக்கம் | தமிழீழ விடுதலைப் புலிகள் |
செயற்பட்ட ஆண்டுகள் | 1970கள்-மே 2009 |
துணைவர் | சிறீரஞ்சனி |
பிள்ளைகள் | மாலிகா, சோபிதன், ஜீவிதன் |
பெற்றோர் | கந்தையா வரதலிங்கம், பாக்கியம் |
குடும்பத்தினர் | இராசலட்சுமி, சரோஜினிதேவி, தர்மகுலசிங்கம் |
புதுவை இரத்தினதுரை என அழைக்கப்படும் வரதலிங்கம் இரத்தினதுரை (பிறப்பு: திசம்பர் 3, 1948) ஈழத்துக் கவிஞரும், பாடலாசிரியரும், சிற்பக் கலைஞரும் ஆவார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை, பண்பாட்டுப் பிரிவின் பொறுப்பாளராகப் பணியாற்றியவர்.[1][2] இவர் ஏராளமான தமிழ்த் தேசியப் புரட்சிப் பாடல்களை எழுதியுள்ளார்.[3] 2009 மே மாதத்தில் ஈழப் போர் முடிவுக்கு வந்த காலத்தில் காணாமல் போனார்.[4][5][6]
இவர் இலங்கையின் வடக்குப் பகுதி விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் இருந்த போது, தமிழீழ கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் பொறுப்பாளராக இருந்தார். 2016 மே 21 இல், தமிழ் கார்டியன், அவர் கடைசியாக 2009 மே 18 அன்று முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவத்தின் காவலில் காணப்பட்டதாக செய்தி வெளியிட்டது.[7][8] 2012 இல், சிங்கள திவயின நாளிதழ், இதனை உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டிருந்தது.[4]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]புதுவை இரத்தினதுரை யாழ்ப்பாண மாவட்டம், புத்தூரில் 1948 திசம்பர் 3 இல் சிற்பக் கலைஞர் கந்தையா வரதலிங்கம் (1916-2004), பாக்கியம் ஆகியோருக்கு இரண்டாவது மகவாகப் பிறந்தார்.[9]
கலையுலகில்
[தொகு]இவர் தனது 14வது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கி விட்டார். இவர் வியாசன், மாலிகா என்ற புனைபெயர்களிலும் பல கவிதைகள் எழுதியுள்ளார். இவர் எழுதிய இந்த மண் எங்களின் சொந்த மண் பலரது வரவேற்பையும் பெற்ற உணர்வுபூர்வமான பாடல் ஆகும். இவர் எழுதிய பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் என்ற ஆன்மிகப் பாடலை இலங்கை இராணுவ 2014 செப்டம்பரில் ஒலிபரப்புவதற்குத் தடை செய்தது.[10]
வெளிவந்த கவிதைத் தொகுப்புகள்
[தொகு]- வானம் சிவக்கிறது (1970)
- இரத்த புஷ்பங்கள்(1980)
- ஒரு தோழனின் காதற் கடிதம்
- நினைவழியா நாட்கள்
- உலைக்களம்
- பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்
வெளிவந்த ஒலிநாடக்கள்
[தொகு]- களத்தில் மலர்ந்தவை (01.02.1989)
- ஊர்க்குயில்
- ஆனையிறவு
- நல்லை முருகன் பாடல்கள்
- திசையெங்கும் இசைவெள்ளம்
இவற்றுள் சில.
இவர் எழுதிய பாடல்களில் சில
[தொகு]- இந்த மண் எங்களின் சொந்த மண்
- ஏறுது பார் கொடி
- தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே
- வேர்கள் வெளியினில் தெரிவதில்லை...
- காவலரண் மீது காவலிருக்கின்ற ஆசை மகளே
- பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே
- காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று
- தீயினில் எரியாத தீபங்களே
- சங்கு முழங்கடா தமிழா
- வாசலிலே அந்த ஒற்றைப் பனைமரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காணாமல் போன புதுவை இரத்தினதுரை எங்கே?" (in Tamil). தினகரன் (இலங்கை). December 13, 2015. http://archives.thinakaran.lk/Vaaramanjari/2015/12/13/?fn=n1512138.
- ↑ "LTTE to impose dress code for Jaffna women". Sunday Times (Sri Lanka). 18 October 2005. https://www.sundaytimes.lk/020428/front/ltte.html.
- ↑ Mathi (2012-12-25). "இலங்கையின் தடுப்புக் காவலில் புதுவை இரத்தினதுரை: சிங்கள ஏடு தகவல்". tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-21.
- ↑ 4.0 4.1 Mathi (December 25, 2012). "இலங்கையின் தடுப்புக் காவலில் புதுவை இரத்தினதுரை: சிங்கள ஏடு தகவல்" (in Tamil). ஒன்இந்தியா. https://tamil.oneindia.com/news/2012/12/25/srilanka-puthuvai-rathinadurai-lanka-custody-166854.html.
- ↑ "Sri Lanka: Observations of the UN Working Group on Enforced or Involuntary Disappearances • Sri Lanka Brief". https://srilankabrief.org/sri-lanka-observations-of-the-un-working-group-on-enforced-or-involuntary-disappearances/.
- ↑ "Report of the Working Group on Enforced or Involuntary Disappearances". https://www.ohchr.org/sites/default/files/Documents/HRBodies/HRCouncil/RegularSession/Session22/A.HRC.22.45_English.pdf.
- ↑ Yamuna Sangarasivam (2022). Nationalism, Terrorism, Patriotism A Speculative Ethnography of War. Springer International Publishing. p. 150, 154, 159. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783030826659.
- ↑ "Diaspora youth group re-aligns Tamil narrative on enforced disappearances". Tamil Net. September 4, 2020. https://www.tamilnet.com/art.html?catid=79&artid=39940.
- ↑ வரதம். 2004.
- ↑ "SL military bans devotional song at ancient Saiva temple in Batticaloa". Srilanka Brief. July 21, 2014. https://srilankabrief.org/sl-military-bans-devotional-song-at-ancient-saiva-temple-in-batticaloa/.
வெளி இணைப்புகள்
[தொகு]- உலைக்களம்:வியாசன் http://www.scribd.com/doc/122361060/Puthuvai-Ulaikalam-collection-1
- A poet's fearless death at Tamil Guardian
- Puthuvai Ratnathurai's Poetry collection