உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசியப் பிரதமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசியப் பிரதமர்
Prime Minister of Malaysia
Perdana Menteri Malaysia
தற்போது
அன்வர் இப்ராகீம்

24 நவம்பர் 2022
 முதல்
மலேசிய அரசாங்கம்
மலேசியப் பிரதமர் துறை
பதவிஅரசாங்கத் தலைவர்
உறுப்பினர்மலேசிய அமைச்சரவை மலேசிய தேசிய பாதுகாப்பு மன்றம்; மலேசிய மக்களவை
வாழுமிடம்செரி பெர்தானா, புத்ராஜெயா
அலுவலகம்பெர்தானா புத்ரா புத்ராஜெயா
நியமிப்பவர்மலேசிய பேரரசர்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள், (புதுப்பிக்கத் தக்கது)
அரசமைப்புக் கருவிமலேசிய அரசியலமைப்பு
முதலாவதாக பதவியேற்றவர்துங்கு அப்துல் ரகுமான்
உருவாக்கம்31 ஆகத்து 1957; 67 ஆண்டுகள் முன்னர் (1957-08-31)
ஊதியம்RM 22,826.65 US $ 5,106 (பிரதமர் ஊதியம் வாங்குவது இல்லை)
இணையதளம்www.pmo.gov.my


மலேசியப் பிரதமர் (மலாய்: Perdana Menteri Malaysia; ஆங்கிலம்: Prime Minister of Malaysia; சீனம்: 马来西亚首相; ஜாவி: ڤردان منتري مليسيا) என்பவர் மலேசிய அரசாங்கத்தின் நிர்வாகத் தலைவர் ஆவார். மலேசியப் பேரரசர், பிரதமரை நியமனம் செய்கிறார். மலேசிய நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்ற ஒருவரே பிரதமராகும் தகுதியைப் பெறுகின்றார்.

பிரதமராகப் பொறுப்பு ஏற்கும் ஒருவர் மலேசிய அமைச்சரவையின் தலைவராகவும் செயல் படுகின்றார். மலேசிய அமைச்சரவை உறுப்பினர்களைப் பிரதமரின் ஆலோசனையின் பேரில் மலேசியப் பேரரசர் நியமனம் செய்கிறார். அந்த அமைச்சரவை மலேசிய நாடாளுமன்றத்தின் முழு பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்கிறது.

பிரதமரின் கீழ், மலேசியப் பிரதமர் துறை எனும் அமைச்சு செயல்படுகின்றது. அன்வர் இப்ராகீம் என்பவர் மலேசியாவின் இப்போதைய பிரதமராகப் பதவி வகிக்கிறார்.

தகுதிகள்

[தொகு]

மலேசிய அரசியலமைப்பின் படி ஒரு பிரதமராகக் கூடியவர் மக்களவையில் ஓர் உறுப்பினராக இருக்க வேண்டும். அத்துடன் மக்களவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையையும் செல்வாக்கையும் பெற்று இருக்க வேண்டும். அவர் ஒரு மலேசியராக இருக்க வேண்டும். அவர் அயல்நாட்டில் இருந்து குடியேறி குடியுரிமை பெற்று இருக்கக்கூடாது.

பிரதமரும் அமைச்சரவை உறுப்பினர்களும் பேரரசரிடம் உறுதிமொழி எடுக்க வேண்டும். மலேசியா விடுதலை அடைந்ததில் இருந்து பாரிசான் நேசனல் - அம்னோவைச் சேர்ந்த ஒருவரே பிரதமராக இருந்து வந்துள்ளார்.

இருப்பினும் 2018-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. பாக்காத்தான் அரப்பான் முன்னணி ஆட்சியைக் கைப்பற்றியது. நாட்டில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டதால் 19 நவம்பர் 2022-இல், முன்கூட்டியே ஒரு பொதுத்தேர்தல் நடைபெற்றது. ஒரு தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டு, பின்னர் 24 நவம்பர் 2022-இல் அன்வார் இப்ராகிம் பிரதமர் பொறுப்பை ஏற்றார்.

பிரதமர் பதவியில் துன் சம்பந்தன்

[தொகு]

மலேசிய வரலாற்றில், ம.இ.காவின் தலைவர் வீ. தி. சம்பந்தன் அவர்களும்; மலேசிய சீனர் சங்கத்தின் தலைவர் லிங் லியோங் சிக் (Ling Liong Sik) அவர்களும்; மலேசியாவின் பிரதமர்களாகத் தற்காலிகமாகப் பதவி வகித்துள்ளனர்.[1] துன் சம்பந்தன் 1973 ஆகஸ்டு 3-ஆம் தேதி, மலேசியாவின் பிரதமர் பதவியை வகித்து உள்ளார்.[2]

முன்னாள் பிரதமர் துன் அப்துல் ரசாக் உசேன் வெளிநாட்டில் இருந்த போது, துணைப் பிரதமராக இருந்த துன் இஸ்மாயில் மரணம் அடைந்தார். அந்தக் கட்டத்தில் துன் சம்பந்தன் தற்காலிகப் பிரதமராகப் பதவி வகித்தார். அமைச்சரவைக் கூட்டத்திற்கும் தலைமை தாங்கினார்.

பிரதமர் பதவியில் லிங் லியோங் சிக்

[தொகு]

மலேசிய சீனர் சங்கத்தின் தலைவர் லிங் லியோங் சிக், 1988 பிப்ரவரி 4-ஆம் தேதி தொடங்கி; 1988 ஆகஸ்டு 16-ஆம் தேதி வரை, மலேசியாவின் பிரதமர் பதவியை வகித்து உள்ளார்.

1988-ஆம் ஆண்டில், பாரிசான் நேசனல் கூட்டணியின் தலைமை உறுப்புக் கட்சியான அம்னோ சட்டவிரோத அரசியல் கட்சியாக அறிவிக்கப்பட்டது. துன் மகாதீர், பாரிசான் நேசனல் தலைவர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

அதன் விளைவாக லிங் லியோங் சிக், பாரிசான் நேசனல் கூட்டணியின் புதிய தலைவரானார். புதிய கட்சியான அம்னோ பாரு, சங்கங்களின் பதிவு அதிகாரியால் சட்டப் பூர்வமாக்கப்படும் வரை, 12 நாட்களுக்கு லிங் லியோங் சிக், பிரதமராகப் பணியாற்றினார்.[3]

பிரதமர் நியமனம்

[தொகு]

மலேசியப் பேரரசர் யாங் டி பெர்துவான் அகோங் அவர்கள், மலேசியப் பிரதமரை நியமிக்கின்றார். பிரதமர் நியமிக்கப் பட்டதும் அவரின் ஆலோசனையின் பேரில் அமைச்சர்களையும் பேரரசர் நியமிக்கின்றார்.[4]

பிரதமரின் ஆலோசனையின் பேரில் எந்த ஓர் அமைச்சரின் நியமனத்தையும் பேரரசர் எந்தக் கட்டத்திலும் ரத்து செய்யலாம். இருப்பினும், பிரதமரைத் தவிர மற்ற அமைச்சர்கள் பேரரசரின் விருப்பத்தின் பேரில் பதவியில் இருக்கலாம். அதே வேளையில் எந்த ஓர் அமைச்சரும் அவருடைய பதவி காலத்தில் அவரின் அமைச்சர் பதவியைத் துறப்பு செய்யலாம்.

நடைமுறையில், அமைச்சர்களின் நியமனம் அல்லது அமைச்சர்களின் பதவி நீக்கம் குறித்து பிரதமரின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் பேரரசர் உள்ளார்.

அமைச்சரவைப் பட்டியல்

[தொகு]
அமைச்சரவை பெயர் அமைச்சரவை தலைவர் அமைச்சரவை காலம் அமைப்பு
துங்கு அப்துல் ரகுமான் அமைச்சரவை 1 துங்கு அப்துல் ரகுமான் 31 ஆகஸ்டு 1957
19 ஆகஸ்டு 1959
  • 13 அமைச்சர்கள்
துங்கு அப்துல் ரகுமான் அமைச்சரவை 2 22 ஆகஸ்டு 1959
24 ஏப்ரல் 1964
  • 16 அமைச்சர்கள்
  • 6 துணை அமைச்சர்கள்
துங்கு அப்துல் ரகுமான் அமைச்சரவை 3 25 ஏப்ரல் 1964
1969
  • 20 அமைச்சர்கள்
  • 5 துணை அமைச்சர்கள்
  • 4 நாடாளுமன்றச் செயலாளர்கள்
துங்கு அப்துல் ரகுமான் அமைச்சரவை 4 1969
21 டிசம்பர் 1970
  • 9 அமைச்சர்கள்
துன் அப்துல் ரசாக் அமைச்சரவை 1 அப்துல் ரசாக் உசேன் 22 டிசம்பர் 1970
24 ஆகஸ்டு 1974
  • 22 அமைச்சர்கள்
  • 7 துணை அமைச்சர்கள்
  • 5 நாடாளுமன்றச் செயலாளர்கள்
துன் அப்துல் ரசாக் அமைச்சரவை 2 25 ஆகஸ்டு 1974
14 சனவரி 1976
  • 20 அமைச்சர்கள்
  • 16 துணை அமைச்சர்கள்
  • 9 நாடாளுமன்றச் செயலாளர்கள்
துன் உசேன் ஓன் அமைச்சரவை 1 உசேன் ஓன் 15 சனவரி 1976
8 சூலை 1978
  • 22 அமைச்சர்கள்
  • 20 துணை அமைச்சர்கள்
  • 8 நாடாளுமன்றச் செயலாளர்கள்
துன் உசேன் ஓன் அமைச்சரவை 2 9 சூலை 1978
15 சூலை 1981
  • 23 அமைச்சர்கள்
  • 22 துணை அமைச்சர்கள்
  • 9 நாடாளுமன்றச் செயலாளர்கள்
துன் மகாதீர் பின் முகமது அமைச்சரவை 1 மகாதீர் பின் முகமது 16 சூலை 1981
21 ஏப்ரல் 1982
  • 24 அமைச்சர்கள்
  • 22 துணை அமைச்சர்கள்
  • 10 நாடாளுமன்றச் செயலாளர்கள்
துன் மகாதீர் பின் முகமது அமைச்சரவை 2 22 ஏப்ரல் 1982
2 ஆகஸ்டு 1986
  • 24 அமைச்சர்கள்
  • 29 துணை அமைச்சர்கள்
  • 9 நாடாளுமன்றச் செயலாளர்கள்
துன் மகாதீர் பின் முகமது அமைச்சரவை 3 11 ஆகஸ்டு 1986
26 அக்டோபர் 1990
  • 24 அமைச்சர்கள்
  • 31 துணை அமைச்சர்கள்
  • 10 நாடாளுமன்றச் செயலாளர்கள்
துன் மகாதீர் பின் முகமது அமைச்சரவை 4 22 அக்டோபர் 1990
3 மே 1995
  • 26 அமைச்சர்கள்
  • 30 துணை அமைச்சர்கள்
  • 14 நாடாளுமன்றச் செயலாளர்கள்
துன் மகாதீர் பின் முகமது அமைச்சரவை 5 4 மே 1995
14 டிசம்பர் 1999
  • 30 அமைச்சர்கள்
  • 27 துணை அமைச்சர்கள்
  • 14 நாடாளுமன்றச் செயலாளர்கள்
துன் மகாதீர் பின் முகமது அமைச்சரவை 6 15 டிசம்பர் 1999
2 நவம்பர் 2003
  • 30 அமைச்சர்கள்
  • 28 துணை அமைச்சர்கள்
  • 16 நாடாளுமன்றச் செயலாளர்கள்
துன் அப்துல்லா படாவி அமைச்சரவை 1 அப்துல்லா அகமது படாவி 3 நவம்பர் 2003
26 மார்ச் 2004
  • 31 அமைச்சர்கள்
  • 29 துணை அமைச்சர்கள்
  • 16 நாடாளுமன்றச் செயலாளர்கள்
துன் அப்துல்லா படாவி அமைச்சரவை 2 27 மார்ச் 2004
18 மார்ச் 2008
  • 34 அமைச்சர்கள்
  • 39 துணை அமைச்சர்கள்
  • 20 நாடாளுமன்றச் செயலாளர்கள்
துன் அப்துல்லா படாவி அமைச்சரவை 3 19 மார்ச் 2008
9 ஏப்ரல் 2009
  • 32 அமைச்சர்கள்
  • 38 துணை அமைச்சர்கள்
நஜீப் ரசாக் அமைச்சரவை 1 நஜீப் ரசாக் 10 ஏப்ரல் 2009
15 மே 2013
  • 33 அமைச்சர்கள்
  • 40 துணை அமைச்சர்கள்
நஜீப் ரசாக் அமைச்சரவை 2 16 மே 2013
9 மே 2018
  • 38 அமைச்சர்கள்
  • 34 துணை அமைச்சர்கள்
துன் மகாதீர் பின் முகமது அமைச்சரவை 7 மகாதீர் பின் முகமது 10 மே 2018
24 பிப்ரவரி 2020
  • 28 அமைச்சர்கள்
  • 27 துணை அமைச்சர்கள்
டான் ஸ்ரீ முகிதீன் யாசின் அமைச்சரவை முகிதீன் யாசின் 1 மார்ச் 2020
16 ஆகஸ்டு 2021
  • 32 அமைச்சர்கள்
  • 38 துணை அமைச்சர்கள்
இஸ்மாயில் சப்ரி யாகோப் அமைச்சரவை இஸ்மாயில் சப்ரி யாகோப் 27 ஆகஸ்டு 2021
24 நவம்பர் 2022
  • 32 அமைச்சர்கள்
  • 38 துணை அமைச்சர்கள்
அன்வார் இப்ராகிம் அமைச்சரவை அன்வார் இப்ராகிம் 24 நவம்பர் 2022
தற்சமயம் வரையில்
  • - அமைச்சர்கள்
  • - துணை அமைச்சர்கள்

மலேசியப் பிரதமர்களின் பட்டியல்

[தொகு]

கட்சி:       அம்னோ கூட்டணி:       மலாயா கூட்டணி       பாரிசான் நேசனல்

தவணை எண். பெயர்
(தொகுதி)
படிமம் பதிவியில் விலகியது கட்சி கூட்டணி
01 1 துங்கு அப்துல் ரகுமான்
கோலா மூடா
31 ஆகஸ்ட் 1957 19 ஆகஸ்ட் 1959 அம்னோ மலேசிய கூட்டணி கட்சி
1959|02 19 ஆகஸ்ட் 1959 10 மே 1969
1969|03 10 மே 1969 22 செப்டம்பர் 1970
2 துன் அப்துல் ரசாக் உசேன்
பெக்கான்
22 செப்டம்பர் 1970 24 ஆகஸ்ட் 1974 அம்னோ மலேசிய கூட்டணி கட்சி
1974|04 24 ஆகஸ்ட் 1974 14 ஜனவரி 1976 பாரிசான் நேசனல்
3 துன் உசேன் ஓன்
ஜொகூர் தீமோர்
14 ஜனவரி 1976 8 ஜூலை 1978 அம்னோ பாரிசான் நேசனல்
1978|05 8 ஜூலை 1978 16 ஜூலை 1981
4 துன் மகாதீர் பின் முகமது
குபாங் பாசு
16 ஜூலை 1981 10 மே 1982 அம்னோ பாரிசான் நேசனல்
1982|06 10 மே 1982 3 ஆகஸ்ட் 1986
1986|07 3 ஆகஸ்ட் 1986 அக்டோபர் 1990
1990|08 அக்டோபர் 1990 24 ஏப்ரல் 1995
1995|09 24 ஏப்ரல் 1995 29 நவம்பர் 1999
1999|10 29 நவம்பர் 1999 31 அக்டோபர் 2003
5 துன் அப்துல்லா அகமது படாவி
கப்பளா பத்தாஸ்
31 அக்டோபர் 2003 21 மார்ச் 2004 அம்னோ பாரிசான் நேசனல்
2004|11 21 மார்ச் 2004 8 மார்ச் 2008
8 மார்ச் 2008 3 ஏப்ரல் 2009
2009|18 6 நஜீப் துன் ரசாக்
பெக்கான்
3 ஏப்ரல் 2009 2018 அம்னோ பாரிசான் நேசனல்
2018| 7 துன் மகாதீர் பின் முகமது
குபாங் பாசு
10 மே 2018 24 பிப்ரவரி 2020 மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி பாக்காத்தான் ஹரப்பான்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Many may not know that Sambanthan was acting prime minister when both the prime minister and his deputy were out of the country at the same time.
  2. "Tun V.T. Sambanthan's Legacy As Nation's First Acting Indian Prime Minister For A Day In 1973". பார்க்கப்பட்ட நாள் 8 February 2022.
  3. "For a Few Days in 1988, Malaysia Actually Had a Chinese Prime Minister". Malaysia Today. 26 February 2019. பார்க்கப்பட்ட நாள் 8 February 2022.
  4. Hj. Mohd Jali, Nazaruddin, Redzuan, Ma'arof, Abu Samah, Asnarulkhadi & Hj. Mohd Rashid, Ismail (2003). Malaysian Studies: Nationhood and Citizenship, p. 73. Pearson Malaysia. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 983-2473-91-8.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசியப்_பிரதமர்&oldid=4097113" இலிருந்து மீள்விக்கப்பட்டது