2015
Appearance
ஆயிரமாண்டு: | 3-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
2015 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 2015 MMXV |
திருவள்ளுவர் ஆண்டு | 2046 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2768 |
அர்மீனிய நாட்காட்டி | 1464 ԹՎ ՌՆԿԴ |
சீன நாட்காட்டி | 4711-4712 |
எபிரேய நாட்காட்டி | 5774-5775 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
2070-2071 1937-1938 5116-5117 |
இரானிய நாட்காட்டி | 1393-1394 |
இசுலாமிய நாட்காட்டி | 1436 – 1437 |
சப்பானிய நாட்காட்டி | Heisei 27 (平成27年) |
வட கொரிய நாட்காட்டி | 104 |
ரூனிக் நாட்காட்டி | 2265 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4348 |
2015 (MMXV) கிரெகோரியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அறுபத்து எட்டாவது அமர்வு, இவ்வாண்டைப் பன்னாட்டு ஒளி ஆண்டாகவும், பன்னாட்டு மண்களின் ஆண்டாகவும் நியமித்தது.[1]
முக்கிய நிகழ்வுகள்
[தொகு]சனவரி
[தொகு]- சனவரி 1 - உருசியா, பெலருஸ், ஆர்மீனியா, கசக்ஸ்தான், கிர்கிசுத்தான் ஆகிய நாடுகள் இணைந்து "இயுரேசிய பொருளாதார ஒன்றியம்" என்ற அரசியல், பொருளாதார அமைப்பைத் தோற்றுவித்தனர்.
- சனவரி 1 - லிதுவேனியா லித்தாசு நாணயத்துக்குப் பதிலாக ஐரோவை ஏற்றுக் கொண்டது.[2]
- சனவரி 3-7 - 2015 பாகாப் படுகொலை: நைஜீரியாவில் போகோ அராம் போராளிகள் 2,000 இற்கும் அதிகமானோரைப் படுகொலை செய்தனர்.[3][4]
- சனவரி 9 - இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015: பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 51.28% வாக்குகள் பெற்று புதிய அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றார். பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார்.
- சனவரி 14 - யோசேப்பு வாஸ் அடிகள் கொழும்பு நகரில் திருத்தந்தை பிரான்சிசுவினால் புனிதராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். (ஃபெர்ஸ்ட்போஸ்ட்)
- சனவரி 22 - எமனில் ஊத்தி படையினர் அரசுத்தலைவர் மாளிகையைத் தாக்கிக் கைப்பற்றினர். அரசுத்தலைவர் பதவி துறந்தார்.[5]
- சனவரி 29 - மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 காணாமல் போனமை ஒரு விபத்து என மலேசியா அதிகாரபூர்வமாக அறிவித்தது.(யூஎஸ்ஏ டுடே)
பெப்ரவரி
[தொகு]- பெப்ரவரி 12 - கிழக்கு உக்ரைனில் இடம்பெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டு வர உருசியா, உக்ரைன், ஜெர்மனி, பிரான்சு ஆகிய நாடுகள் உடன்பாடு ஒன்றை எட்டின.[6]
மார்ச்
[தொகு]- மார்ச் 5–8 - ஈராக்கின் பழம்பெரும் நகரங்களான நிம்ருத், ஆட்ரா, டுர்-சாருக்கின் ஆகியன இசுலாமிய அரசு போராளிகளால் தகர்க்கப்பட்டன.[7]
- மார்ச் 6 - நாசாவின் டோன் விண்கலம் சியரீசு குறுங்கோளின் சுற்றுவட்டத்தை அடைந்தது. குறுங்கோள் ஒன்றுக்குச் சென்ற முதலாவது விண்கலம் இதுவாகும்.[8][9]
- மார்ச் 24 - **செருமன்விங்ஸ் விமானம் 9525: பார்செலோனாவில் இருந்து தியூசல்டோர்ஃபு சென்ற செருமனிய விமானம் ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைத்து 150 பேரும் கொல்லப்பட்டனர்.[10]
ஏப்ரல்
[தொகு]- ஏப்ரல் 2 - கென்யாவின் வடகிழக்கேயுள்ள கரிசா பல்கலைக்கழகத்தைத் தாக்கிய அல்-சபாப் தீவிரவாதிகள் குறைந்தது 147 கிறித்தவ மாணவர்களைச் சுட்டுக் கொன்றனர். 65 பேர் காயமடைந்தனர்.[11]
- ஏப்ரல் 25 - 2015 நேபாள நிலநடுக்கம்: நேபாளத் தலைநகர் காட்மாண்டூவில் 7.9 அளவு தீவிர நிலநடுக்கம் ஏற்பட்டது. 8,857 பேர் உயிரிழந்தனர், உலக பாரம்பரியக் களங்கள் பல அழிந்தன. இந்தியா, வங்காளதேசம், திபெத்துவிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.[12][13][14][15][16] with a total of 9,018 deaths.
மே
[தொகு]- மே 11 - சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா, சசிகலா உட்பட நால்வரை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- மே 11-12 - பாப்லோ பிக்காசோவின் அல்சீரியாவின் பெண்கள் என்ற ஓவியம் $179,365,000 இற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. வரலாற்றிலேயே ஓவியம் ஒன்றுக்குக் கொடுக்கப்பட்ட மிக அதிகமான விலை இதுவாகும்.[17]
- மே 12 - நேபாளத்தில் 7.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 153 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் 62 பேர் உயிரிழந்தனர்.[18][19]
சூன்
[தொகு]- சூன் 30 - எச்.ஐ.வி, சிபிலிசு கிருமிகளை தாயில் இருந்து குழந்தைக்குப் பரவுவதை முற்றாகத் தடுத்த முதலாவது நாடாக கியூபா வந்து சாதனை படைந்தது.[20]
- இந்தோனேசியாவில் [[மேடான்] நகரில் விமானப் படை விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 143 பேர் உயிரிழந்தனர்.
சூலை
[தொகு]- சூலை 14 - நாசாவின் நியூ ஹரைசன்ஸ் விண்கலம் புளூட்டோவுக்கு அண்மையாக சென்றது.[21]
- சூலை 20 - 54 ஆண்டுகளுக்குப் பின்னர் கியூபாவும், அமெரிக்கா தூதரக உறவைப் புதுப்பித்துக் கொண்டன.[22]
ஆகத்து
[தொகு]- ஆகத்து 5 - மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370: சூலை 29 இல் ரீயூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட விமானத் துண்டுகள் மலேசிய விமானத்தின் பாகங்களே என மலேசியப் பிரதமர் நஜீப் துன் ரசாக் உறுதிப்படுத்தினார்.[23]
- ஆகத்து 17 - பேங்காக் நகரில் பிரம்மன் கோவிலில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 20 பேர் கொல்லப்பட்டனர்.[24]
செப்டம்பர்
[தொகு]- செப்டம்பர் 24 - 2015 ஹஜ் கூட்ட நெரிசல் விபத்து: மக்கா நகரில் ஹஜ் பயணம் சென்றோர் 2,200 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.
- செப்டம்பர் 28 - செவ்வாயில் திரவ நீர் கண்டுபிடிக்கப்பட்டதாக நாசா அறிவித்தது.[25]
- செப்டம்பர் 30 - இசுலாமிய அரசு போராளிகளுக்கு எதிராக சிரியாவில் வான்தாக்குதல்களை உருசியா ஆரம்பித்தது.
அக்டோபர்
[தொகு]- அக்டோபர் 26 - 2015 ஆப்கானித்தான் நிலநடுக்கம்: 7.5 நிலநடுக்கத்தில் இந்து குஷ் பகுதியில் 398 பேரும்,[26] பாக்கித்தானின் 279 பேரும், இந்தியாவில் 4 பேரும் உயிரிழந்தனர்.
- அக்டோபர் 31 - சென் பீட்டர்ஸ்பேர்க் நோக்கிச் சென்ற மெட்ரோஜெட் விமானம் 9268 ஒன்று சிரியாவின் சினாய் மலைப்பகுதியில் வீழ்ந்ததில் அனைத்து 224 பேரும் உயிரிழந்தனர்.[27]
நவம்பர்
[தொகு]- நவம்பர் 13 - நவம்பர் 2015 பாரிசுத் தாக்குதல்: இசுலாமிய அரசு போராளிகள் பாரிசில் நடத்திய தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர்.[28]
- நவம்பர் 24 - சிரிய உள்நாட்டுப் போர்: உருசியாவின் போர் விமானம் ஒன்று துருக்கியினால் சுட்டு வீழ்த்தப்பட்டது.[29]
டிசம்பர்
[தொகு]- டிசம்பர் 22 - எசுபேசுஎக்சு நிறுவனத்தின் மீளப் பாவிக்கக்கூடிய பால்கன் 9 ராக்கெட் ஒன்று வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டு மீண்டது.[30]
இறப்புகள்
[தொகு]- சனவரி 19 - ரஜ்னி கோத்தாரி, அரசியல் அறிஞர் (பி. 1928)
- சனவரி 23 - அப்துல்லா, சவூதி அரேபிய மன்னர் (பி. 1924)
- சனவரி 24 - வி. எஸ். ராகவன், தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (பி. 1925)
- சனவரி 26 - ஆர். கே. லட்சுமண், கேலிச் சித்திர ஓவியர் (பி. 1921)
- பெப்ரவரி 4 - யாழ்ப்பாணம் சின்னமணி, ஈழத்து வில்லிசைக் கலைஞர் (பி. 1936)
- பெப்ரவரி 5 - கே. என். சொக்சி, இலங்கை அரசியல்வாதி, அமைச்சர் (பி. 1933)
- பெப்ரவரி 24 - ஐ. மாயாண்டி பாரதி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடமையாளர், இதழாளர் (பி. 1917)
- பெப்ரவரி 25 - அ. வின்சென்ட், திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர் (பி. 1928)
- மார்ச் 1 - யோசுவா ஃபிஷ்மன், யூத அமெரிக்க சமூகவியலாளர், மொழியியலாளர் (பி. 1926)
- மார்ச் 6 - கிஷோர், தமிழ்த் திரைப்படத் தொகுப்பாளர் (பி. 1978)
- மார்ச் 8 - கி. பி. அரவிந்தன், ஈழத்து எழுத்தாளர், கவிஞர், ஈழ விடுதலைப் போராளி (பி. 1953)
- மார்ச் 8 - வினோத் மேத்தா, இந்தியப் பத்திரிகையாளர் (பி. 1941)
- மார்ச் 16 - தோடகொப்பலு காரியப்பா இரவி, இந்திய ஆட்சிப் பணியாளர் (பி. 1979)
- மார்ச் 17 - பாப் ஆப்பிள்யார்ட், இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர் (பி. 1924)
- மார்ச் 20 - மால்கம் பிரேசர், ஆத்திரேலியாவின் முன்னாள் பிரதமர் (பி. 1930)
- மார்ச் 23 - லீ குவான் யூ, சிங்கப்பூரின் நிறுவனரும், முதலாவது பிரதமரும் (பி. 1923)
- ஏப்ரல் 7 - கமலினி செல்வராஜன், ஈழத்து நாடக, திரைப்பட நடிகை, வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1954)
- ஏப்ரல் 8 - ஜெயகாந்தன், எழுத்தாளர் (பி. 1934)
- ஏப்ரல் 8 - நாகூர் அனிபா, பாடகர் (பி. 1925)
- ஏப்ரல் 10 - ரிச்சி பெனோட், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர், விவரணையாளர் (பி. 1930)
- ஏப்ரல் 13 - கூன்டர் கிராசு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற செருமானியர் (பி. 1927)
- ஏப்ரல் 27 - க. அருணாசலம், ஈழத்து எழுத்தாளர், தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1946)
- ஏப்ரல் 29 - மயூரன் சுகுமாரன், இந்தோனேசியாவில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆத்திரேலியத் தமிழர் (பி. 1981)
- ஏப்ரல் 29 - கோபுலு, தமிழக ஓவியர் (பி. 1924)
- மே 18 - அருணா சான்பாக், இந்திய செவிலியர், வன்புணர்ச்சிக்குள்ளானவர்.
- மே 21 - டேவிட் பிளேக், இங்கிலாந்துத் துடுப்பாட்ட வீரர் (பி. 1925)
- மே 23 - ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க கணிதவியலாளர் (பி. 1928)
- மே 30 - அஸ்மத் ரனா, பாக்கித்தானிய துடுப்பாட்டக்காரர் (பி. 1951)
- சூன் 2 - சி. ஜெயபாரதி, மலேசியத் தமிழ்றிஞர் (பி. 1941)
- சூலை 27 - ஆ. ப. ஜெ. அப்துல் கலாம், இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர், அணு அறிவியலாளர் (பி. 1931)
- செப்டம்பர் 6 - உ. இராதாகிருஷ்ணன், ஈழத்து வயலின் கலைஞர் (பி. 1943)
- செப்டம்பர் 9 - கந்தையா குணரத்தினம், இயற்பியலாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் (பி. 1934)
- செப்டம்பர் 11 - ஜோசப் ராஜேந்திரன், ஈழத்து மெல்லிசைப் பாடகர்
- செப்டம்பர் 13 - பிரயன் குளோஸ், இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் (பி. 1931)
- செப்டம்பர் 14 - கௌதம நீலாம்பரன், தமிழக எழுத்தாளர் (பி. 1948)
- செப்டம்பர் 14 - இந்திக குணவர்தனா, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (பி. 1943)
- அக்டோபர் 3 - ஏ. ஆர். எம். அப்துல் காதர், இலங்கை அரசியல்வாதி (பி. 1936)
- அக்டோபர் 5 - திருமாவளவன், ஈழத்துக் கவிஞர் (பி. 1955)
- அக்டோபர் 7 - ஹசன் ஜமீல், பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர் (பி. 1952)
- அக்டோபர் 9 - என். ரமணி, புல்லாங்குழல் கலைஞர் (பி. 1934)
- அக்டோபர் 9 - ப. ஆப்டீன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1937)
- அக்டோபர் 10 - மனோரமா, தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1937)
- அக்டோபர் 10 - ரிச்சர்டு ஃகெக், வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1931)
- அக்டோபர் 11 - எஸ். ஏ. டேவிட், ஈழத்துக் கட்டிடக் கலைஞர், காந்தியவாதி (பி. 1924)
- அக்டோபர் 13 - கருப்பையா வேலாயுதம், இலங்கை மலையக அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (பி. 1950)
- அக்டோபர் 18 - தமிழினி, தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவி (பி. 1972)
- அக்டோபர் 21 - வெங்கட் சாமிநாதன், தமிழக எழுத்தாளர், திறனாய்வாளர்
- நவம்பர் 1 - ஆ. வேலுப்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1936)
- நவம்பர் 3 - டொம் கிரவெனி, இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் (பி. 1927)
- நவம்பர் 8 - மாதுலுவாவே சோபித்த தேரர், இலங்கைப் பௌத்த பிக்கு, மனித உரிமை செயற்பாட்டளர் (பி. 1942)
- நவம்பர் 9 - சிற்பி, ஈழத்து எழுத்தாளர் (பி. 1933)
- நவம்பர் 14 - கே. எஸ். கோபாலகிருஷ்ணன், தமிழ்த் திரைப்பட இயக்குனர் (பி. 1929)
- நவம்பர் 17 - பித்துக்குளி முருகதாஸ், பக்திப் பாடகர் (பி. 1920)
- நவம்பர் 18 - கா. மீனாட்சிசுந்தரம், தமிழறிஞர் (பி. 1925)
- நவம்பர் 22 - சலாகுதீன் காதர் சௌத்ரி, வங்காளதேச அரசியல்வாதி, போர்க்குற்றவாளி (பி. 1949)
- டிசம்பர் 1 - விக்கிரமன், பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. 1928)
- டிசம்பர் 2 - எம். ஏ. எம். ராமசாமி, தொழிலதிபர், அரசியல்வாதி (பி 1931)
- டிசம்பர் 13 - அருண் விஜயராணி, ஈழத்து எழுத்தாளர் (பி. 1954)
- டிசம்பர் 21 - ஹரி ஸ்ரீனிவாசன், தொழுநோய் மருத்துவர், எழுத்தாளர் (பி. 1929)
- டிசம்பர் 29 - தமிழண்ணல், தமிழறிஞர் (பி. 1928)
2015 நாட்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "United Nations Observances: International Years". ஐக்கிய நாடுகள் அவை. பார்க்கப்பட்ட நாள் 29 April 2015.
- ↑ Kropaitas, Zivile (2015-01-01). "Lithuania joins Baltic neighbours in euro club". BBC News. http://www.bbc.com/news/world-europe-30635826. பார்த்த நாள்: 2015-01-01.
- ↑ "Boko Haram destroys at least 16 villages in NE Nigeria: officials". Business Insider. ஏஎஃப்பி. 8 சனவரி 2015 இம் மூலத்தில் இருந்து 1 ஏப்ரல் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180401115140/http://www.businessinsider.com/afp-boko-haram-destroys-at-least-16-villages-in-ne-nigeria-officials-2015-1. பார்த்த நாள்: 8 January 2015.
- ↑ "Boko Haram crisis: Nigeria's Baga town hit by new assault". பிபிசி. பிபிசி. 8 January 2015. http://www.bbc.com/news/world-africa-30728158. பார்த்த நாள்: 8 January 2015.
- ↑ "Yemen president quits amid worsening crisis". Al Jazeera. 2015-01-22. பார்க்கப்பட்ட நாள் 2015-01-24.
- ↑ "Ukraine crisis: Leaders agree peace roadmap". BBC. 12 February 2015 இம் மூலத்தில் இருந்து 14 பிப்ரவரி 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150214094447/http://m.bbc.co.uk/news/world-europe-31435812. பார்த்த நாள்: 12 February 2015.
- ↑ "ISIL fighters bulldoze ancient Assyrian palace in Iraq". அல்ஜசீரா. 5 March 2015. பார்க்கப்பட்ட நாள் 6 March 2015.
- ↑ "NASA Spacecraft Becomes First to Orbit a Dwarf Planet". NASA. 6 March 2015. http://www.nasa.gov/press/2015/march/nasa-spacecraft-becomes-first-to-orbit-a-dwarf-planet/index.html. பார்த்த நாள்: 6 March 2015.
- ↑ "Nasa's Dawn probe achieves orbit around Ceres". BBC. 6 March 2015 இம் மூலத்தில் இருந்து 2 ஏப்ரல் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402112114/http://m.bbc.co.uk/news/science-environment-31754586. பார்த்த நாள்: 6 March 2015.
- ↑ "Germanwings plane 4U 9525 crashes in French Alps - no survivors". BBC. 24 March 2015. http://www.bbc.co.uk/news/world-europe-32030270. பார்த்த நாள்: 24 March 2015.
- ↑ Gettleman, Jeffrey (April 3, 2015). "Come Out and Live, Shabab Told Kenya Students. It Was a Lie". The New York Times. http://www.nytimes.com/2015/04/04/world/africa/kenyan-students-describe-shabab-attack-on-garissa-university-college.html.
- ↑ "Nepal earthquake: Hundreds die, many feared trapped". BBC News. April 25, 2015. http://www.bbc.co.uk/news/world-asia-32461019. பார்த்த நாள்: April 25, 2015.
- ↑ Rai, Bhrikuti (2015-04-26). "Nepal earthquake death toll tops 3,200". latimes.com (Los Angeles Times). http://www.latimes.com/world/asia/la-fg-nepal-quake-aftershock-20150426-story.html. பார்த்த நாள்: 2015-04-26.
- ↑ "Nepal earthquake: 52 dead, hundreds injured in India, huge damage in bordering areas". Hindustan Times. 25 April 2015 இம் மூலத்தில் இருந்து 26 ஏப்ரல் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150426005807/http://m.hindustantimes.com/india-news/earthquake-spells-destruction-in-india-20-feared-dead-houses-damaged/article1-1340918.aspx. பார்த்த நாள்: 25 April 2015. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-26. பார்க்கப்பட்ட நாள் 2016-01-01.
- ↑ "Nepal quake: Hundreds dead, history crumbles, Everest shaken". KSL. Associated Press. 25 April 2015. பார்க்கப்பட்ட நாள் 25 April 2015.
- ↑ Stanglin, Doug. "Hundreds dead as 7.8 magnitude quake rocks Nepal". USA Today. http://www.usatoday.com/story/news/world/2015/04/25/nepal-earthquake/26354073. பார்த்த நாள்: 25 April 2015.
- ↑ "Picasso's Women of Algiers smashes auction record". BBC News Online. 12 May 2015. http://www.bbc.co.uk/news/entertainment-arts-32700575. பார்த்த நாள்: 12 May 2015.
- ↑ "Fresh earthquake kills scores in Nepal and India". Yahoo News. May 12, 2015.
- ↑ Jason Burke. "Nepal rocked by 7.3-magnitude earthquake near Mount Everest". the Guardian.
- ↑ "WHO validates elimination of mother-to-child transmission of HIV and syphilis in Cuba". உலக சுகாதார அமைப்பு. 30 June 2015. பார்க்கப்பட்ட நாள் 30 Aug 2015.
- ↑ "New Horizons: Nasa spacecraft speeds past Pluto". BBC. 14 July 2015. http://www.bbc.co.uk/news/science-environment-33524589. பார்த்த நாள்: 14 July 2015.
- ↑ "Cuban flag flies in Washington as relations restored". BBC News. 2015-07-20. http://www.bbc.com/news/world-latin-america-33590417. பார்த்த நாள்: 2015-07-21.
- ↑ "MH370 families question Malaysian evidence". CNBC. 6 August 2015. http://www.cnbc.com/2015/08/05/experts-examine-wing-debris-for-links-to-missing-malaysian-jet.html. பார்த்த நாள்: 6 August 2015.
- ↑ "Bangkok bomb: Explosion close to Erawan shrine kills at least 27 people including four foreigners – latest updates". த டெயிலி டெலிகிராப். 17 August 2015. http://www.telegraph.co.uk/news/worldnews/asia/thailand/11807583/Explosion-rocks-Bangkok-close-to-Erawan-shrine-with-reports-of-casualties-live.html. பார்த்த நாள்: 17 August 2015.
- ↑ "NASA News Conference: Evidence of Liquid Water on Today's Mars". நாசா. 28 September 2015.
- ↑ Ben Brumfield, CNN (26 October 2015). "Deaths, damage reported in powerful Afghanistan quake". CNN. பார்க்கப்பட்ட நாள் 26 October 2015.
{{cite web}}
:|author=
has generic name (help) - ↑ "Sinai plane crash: No survivors on Russian airliner KGL9268". BBC. 31 October 2015. பார்க்கப்பட்ட நாள் 31 October 2015.
- ↑ Paris attacks: 'Three teams' involved - prosecutor Molins
- ↑ http://www.maxim.com/maxim-man/article/turkey-russia-warplane-ISIS-2015-11
- ↑ Zolfagharifard, Ellie (22 December 2015). "Elon Musk makes space travel history: Billionaire's SpaceX rocket blasts into orbit, launches 11 satellites then makes an amazing landing back on Earth". Daily Mail. http://www.dailymail.co.uk/sciencetech/article-3369783/WATCH-LIVE-Falcon-9-liftoff-SpaceX-successfully-launches-reusable-rocket-land-Earth-one-piece.html. பார்த்த நாள்: 22 December 2015.