தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

சீருடை நாட்கள்

முத்தாசென் கண்ணா

அருணாக்கயிறில் குடித்தனம் நடத்திய !
அந்த அழுக்கு அரைக்கால் டிரவுசரின் !
வாசனையை உணர முடிகிறது...!
என் பழைய பள்ளிக் கட்டடத்தை!
கடந்து போக நேர்கையில்!
பலமுறை என் தத்தா செத்துப்போனதாய்!
அறிவித்த விடுமுறை விண்ணப்பங்களையும்!
ஆரஞ்சு மிட்டைக்கான ஆர்வக் கோளாறில்!
தேசியக் கொடியைத் தலைகீழாக!
குண்டூசியில் ஏற்றிய !
ஆகஸ்டு பதினைந்துகளையும்!
எல்லப்பனின் தகர டப்பாவை !
மறைத்து வைத்ததனால் ஏற்ப்பட்ட மனஸ்தாபத்தில் !
இன்று வரை பேசாமலிருப்பதும்!
கூட்டாஞ்ச்சோத்துக்காக சுள்ளிகள் பொறுக்கிய!
சொப்பு விளையாட்டுகளையும்!
அசைபோடத் தோன்றுகிறது...!
மௌஸ் ஹேங்க் ஆயிடிச்சி டாடி!
என்கிற என் மகனின் குரலால்...!
-முத்தாசென் கண்ணா

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

மயிலே இறகாய்

ஆ. மணவழகன்

புத்தகத்தின் நடுவில்
புதைத்து வைத்த மயிலிறகு
குட்டி போடவில்லை இன்னும்...
இறகு கொடுத்த உன் நினைவோ
'குட்டி மேல் குட்டி'