'முந்தைய பர்ச்சேஸில் பில்லிங் சிக்கல்' அல்லது 'சரிபார்ப்பு தேவை' என்ற செய்தி காட்டப்படும்போது
இந்தச் செய்திகள் காட்டப்பட்டால், உங்களுக்கு நிலுவைத் தொகை உள்ளது. உங்கள் கட்டண முறையை மாற்றவும் அல்லது கிஃப்ட் கார்டை ரிடீம் செய்து, அந்த பேலன்ஸைப் பயன்படுத்தி பணம் செலுத்தப்படாத ஆர்டர்களுக்குப் பணம் செலுத்தவும்.
நிலுவைத் தொகை இருக்கும்போது
'முந்தைய பர்ச்சேஸில் பில்லிங் சிக்கல்' அல்லது 'சரிபார்ப்பு தேவை' என்ற செய்தி காட்டப்பட்டால், முந்தைய பர்ச்சேஸுக்கு உங்கள் கட்டண முறையில் Appleளால் கட்டணம் விதிக்க முடியாததால், உங்களுக்கு நிலுவைத் தொகை உள்ளது என்று பொருள். நிலுவைத் தொகை செலுத்தப்படும் வரை, நீங்கள் இவற்றைச் செய்ய முடியாமல் போகலாம்:
- புதிதாகப் பர்ச்சேஸ் செய்தல் 
- இலவச ஆப்ஸைப் பதிவிறக்குதல் 
- சந்தாக்களைப் பயன்படுத்துதல் 
நிலுவைத் தொகை செலுத்தப்பட்டதும் நீங்கள் புதிதாகப் பர்ச்சேஸ் செய்யலாம், சந்தாக்களை மீண்டும் பயன்படுத்தலாம்.
செலுத்தப்படாத நிலுவைத் தொகையை எப்படிச் செலுத்துவது?
செல்லுபடியாகும் புதிய கட்டண முறையைப் பயன்படுத்தியோ, Apple Gift Card அல்லது App Store & iTunes கிஃப்ட் கார்டை வாங்கி ரிடீம் செய்தோ நீங்கள் நிலுவைத் தொகையைச் செலுத்தலாம்.
உங்கள் கட்டண முறையை மாற்றுதல்
- பழைய கட்டண முறையை அகற்றவும். 
- புதிய கட்டண முறையில் தானாகவே கட்டணம் விதிக்கப்படும். 
Apple Gift Card அல்லது App Store & iTunes கிஃப்ட் கார்டைப் பயன்படுத்துதல்
- Apple Gift Card அல்லது App Store & iTunes கிஃப்ட் கார்டை வாங்கவும்.* 
- நீங்கள் கிஃப்ட் கார்டை ரிடீம் செய்து உங்கள் Apple கணக்கில் பணம் சேர்க்கலாம். 
- உங்கள் iPhone அல்லது iPadல், அமைப்புகள் ஆப்ஸைத் திறந்து உங்கள் பெயரைத் தட்டவும். 
- மீடியா & பர்ச்சேஸ்கள் என்பதைத் தட்டி, கணக்கைக் காட்டு என்பதைத் தட்டவும். 
- பர்ச்சேஸ் பதிவுகள் என்பதைத் தட்டவும். 
- "நீங்கள் செலுத்த வேண்டிய தொகை" என்று சிவப்பு நிறத்தில் காட்டப்படும் ஆர்டரைத் தட்டவும். 
- Apple கணக்கு கிரெடிட் மூலம் பணம் செலுத்து என்பதைத் தட்டவும். 
பணம் செலுத்தப்படாத ஆர்டருக்குப் பணம் செலுத்திய பிறகு, மீதமுள்ள Apple கணக்கு பேலன்ஸைப் பயன்படுத்தி நீங்கள் பர்ச்சேஸ் செய்யலாம்.
* கிஃப்ட் கார்டுகள் எல்லா நாடுகளிலும் அல்லது பிராந்தியங்களிலும் கிடைக்காது.
நீங்கள் குடும்பப் பகிர்தல் வசதியைப் பயன்படுத்தினால்
நீங்கள் குடும்பப் பகிர்தல் வசதியைப் பயன்படுத்துகிறீர்கள், அத்துடன் பர்ச்சேஸ் பகிர்தலும் இயக்கப்பட்டுள்ளது என்றால், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பர்ச்சேஸ் செய்யும்போது குடும்ப ஒருங்கிணைப்பாளரின் கட்டண முறைக்குக் கட்டணம் விதிக்கப்படும்.
நீங்கள் குடும்ப ஒருங்கிணைப்பாளர் என்றால்
நீங்களோ உங்கள் குடும்ப உறுப்பினர்களோ பர்ச்சேஸ் செய்ய முடியாவிட்டால், உங்கள் கட்டண முறையை மாற்றவும்.
நீங்கள் குடும்ப ஒருங்கிணைப்பாளர் இல்லை என்றால்
உங்களால் பர்ச்சேஸ் செய்ய முடியாவிட்டால்:
- குடும்ப ஒருங்கிணைப்பாளரிடம் அவரின் கட்டண முறையை மாற்றச் சொல்லவும். 
- இல்லாவிட்டால், கிஃப்ட் கார்டை ரிடீம் செய்து பணம் செலுத்தப்படாத ஆர்டருக்குப் பணம் செலுத்தவும். 
உங்களுக்கு இன்னும் உதவி தேவைப்பட்டால்
நிலுவைத் தொகையை இன்னும் செலுத்த முடியவில்லை என்றால், Apple உதவி சேவையைத் தொடர்புகொள்ளவும்.