Siriஐக் கேளுங்கள்
குறிப்பு: Siriஐப் பயன்படுத்த நீங்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஏதேனும் ஒரு செயலைச் செய்யும்படி Siriஐக் கேட்பதற்கு முன், நீங்கள் Siriஐச் செயல்படுத்தியிருக்க வேண்டும்.
பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்து Siriஐச் செயல்படுத்தவும்:
உங்கள் குரல் மூலம்: “Siri” அல்லது “Hey Siri” எனச் சொல்லுங்கள் (இந்த விருப்பம் கிடைத்து, Siri அமைப்புகளில் ஆன் செய்யப்பட்டிருந்தால்). உங்கள் சாதனத்திலும் மொழியிலும் “Hey Siri” அல்லது “Siri” அம்சம் கிடைக்கிறதா என்று பார்க்க, iOS மற்றும் iPadOS அம்சங்கள் கிடைக்கும்தன்மை இணையதளத்தைப் பார்க்கவும்.
iPadஇல் உள்ள பட்டன்களைப் பயன்படுத்துதல்: Touch ID கொண்ட iPadஇல் மேல் பட்டனை அழுத்திப் பிடிக்கவும் அல்லது முகப்பு பட்டன் கொண்ட iPadஇல் முகப்பு பட்டனை அழுத்திப் பிடிக்கவும்.
உங்கள் iPadஇல் இணைக்கப்பட்டுள்ள ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்துதல்: உங்கள் EarPodsஇல் உள்ள நடு அல்லது அழைப்பு பட்டனை அழுத்திப் பிடிக்கவும். AirPodsக்கு, AirPods பயனர் வழிகாட்டியில் உள்ள Siriஐ அமைத்தல் என்பதைப் பார்க்கவும்.