Google அமைப்புகளை நிர்வகித்தல்

உங்கள் மொபைலோ டேப்லெட்டோ Google Play சேவைகளைப் பயன்படுத்தினால், உங்கள் Google ஆப்ஸையும் சேவைகளையும் Google அமைப்புகளில் நீங்கள் நிர்வகிக்கலாம்.

முக்கியமானது: பிரத்தியேகமான Android பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள். இந்த வழிமுறைகள் பலன் தரவில்லை என்றால் உங்கள் சாதன உற்பத்தியாளரைத் தொடர்புகொள்ளவும்.கவனத்திற்கு: இந்தப் படிகளில் சிலவற்றை Android 8.0 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் மட்டுமே செய்ய முடியும். உங்கள் Android பதிப்பைத் தெரிந்துகொள்வது எப்படி என அறிந்துகொள்ளுங்கள்.

Google அமைப்புகளைத் திறத்தல்

உங்கள் சாதனத்தைப் பொறுத்து இவற்றில் ஒன்றைச் செய்யவும்:

  • உங்கள் சாதனத்தின் அமைப்புகள் ஆப்ஸைத் திறந்து Google என்பதைத் தட்டவும்.
  • அமைப்புகள் ஆப்ஸை திறக்கவும்.

Google அமைப்புகளை நிர்வகித்தல்

கணக்கு

  1. உங்கள் சுயவிவரப் படம் அல்லது பெயரின் முதல் எழுத்தை அதன் பிறகு தட்டி, உங்கள் Google கணக்கை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும்.
  2. இவற்றில் ஒரு பிரிவைத் தட்டவும்:

சேவைகள்

பரிந்துரைக்கப்படுபவை பிரிவில் முக்கியமான அம்சங்கள் காட்டப்படும். உங்கள் Android சாதனத்தின் மூலம் அதிகப் பலன்களைப் பெற, அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

கூடுதல் அம்சங்களை அணுக "அனைத்துச் சேவைகள்" பிரிவுக்குச் செல்லவும். உதாரணம்:

  • Google ஆப்ஸுக்கான அமைப்புகள்
    • Google ஆப்ஸுக்கான அமைப்புகளை நிர்வகிக்கலாம்.
  • இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் & பகிர்தல்
    • பிற சாதனங்களுடன் பகிரப்பட்ட அம்சங்களுக்கான அமைப்புகளை நிர்வகிக்கலாம்.
  • தனியுரிமை & பாதுகாப்பு
  • தன்னிரப்பி & கடவுச்சொற்கள்
    • உங்கள் முகவரி, பேமெண்ட் முறை, கடவுச்சொற்கள் போன்ற தனிப்பட்ட தகவலுடன் படிவங்களைத் தன்னிரப்ப Google எந்தெந்தத் தகவல்களைப் பயன்படுத்தலாம் என்பதை நிர்வகிக்கலாம்.
  • காப்புப் பிரதி & மீட்டெடுத்தல்
    • சேமிப்பகத்தை நிர்வகிக்கலாம், உங்கள் சாதனத்தை நேரடியாகக் காப்புப் பிரதி எடுக்கலாம், தொடர்புகளை ஒத்திசைத்து மீட்டெடுக்கலாம் அல்லது அருகிலுள்ள சாதனத்தை அமைக்கலாம்.
  • குழந்தைகள் & குடும்பம்
  • தனிப்பட்ட & சாதனப் பாதுகாப்பு
    • தொலைந்த சாதனத்தைத் தொலைவிலிருந்து கண்டறியவும் அழிக்கவும் அறியப்படாத டிராக்கர் குறித்த விழிப்பூட்டல்களைப் பெறவும் அமைப்புகளை நிர்வகிக்கலாம்.
  • வாகனம் ஓட்டுதல்
    • வாகனம் ஓட்டும்போது அறிவிப்புகளை ஒலியடக்கலாம்.
  • சாதனக் கொள்கை
    • பணிக் கணக்கை அமைக்கலாம்.
true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
299771525224811704
true
உதவி மையத்தில் தேடுக
false
true
true
true
true
true
70975
false
false
false
false