உங்கள் சிறாரின் Apple Watch அமைப்புகளை மாற்றுதல்
நீங்கள் உங்கள் சிறாரின் Apple Watch அமைப்புகளை (அதில் சேர்க்கப்பட்டுள்ள செயலிகள் உட்பட) மாற்றலாம்.
வாட்ச்சை நிர்வகிக்கப் பயன்படுத்தப்படும் iPhoneஇல் உள்ள Apple Watch
செயலிக்குச் செல்லவும்.
“எனது Watch” என்பதைத் தட்டவும், “குடும்பத்திலுள்ள Watchகள்” என்பதைத் தட்டவும், பிறகு ஒரு வாட்ச்சைத் தட்டி, “முடிந்தது” என்பதைத் தட்டவும்.
நிர்வகிக்கப்படும் வாட்ச்சில் “எனது Watch” என்பதைத் தட்டும்போது பின்வருபவை உட்பட பல்வேறு அமைப்புகள் காட்டப்படும்:
அமைப்புகள் | விருப்பங்கள் |
|---|---|
பொது அமைப்புகள் | புதுப்பிப்புகள் உள்ளனவா என்று பார்த்தல், மொழி மற்றும் வட்டாரத்தை மாற்றுதல், Apple Watchஐ மீட்டமைத்தல். |
மொபைல் சேவை | மொபைல் சேவையை இதுவரை அமைக்கவில்லை என்றால் அமைக்கவும். உங்கள் மொபைல் சேவைத் திட்டத்தில் Apple Watchஐச் சேர்த்தல் என்பதைப் பார்க்கவும். |
சைகைகள் | “ஒலிமுடக்க, மூடவும்” அம்சத்தை ஆன் செய்யவும். Apple Watchஐப் பயன்படுத்த பட்டன்களையும் சைகைகளையும் பயன்படுத்துதல் என்பதைப் பார்க்கவும். |
அணுகல்தன்மை | அணுகல்தன்மை அமைப்புகளை உள்ளமைக்கலாம். |
அவசரகால SOS | பக்கவாட்டு பட்டனை அழுத்திப் பிடிக்கும் விருப்பத்தை ஆன் அல்லது ஆஃப் செய்து, அவசரகாலச் சேவைகளை அழைக்கலாம், அவசரகாலத் தொடர்புகளைச் சேர்க்கலாம் மற்றும் மாற்றலாம். |
பள்ளிநேரம் | பள்ளிநேர அட்டவணையை அமைக்கலாம். உங்கள் சிறாரின் Apple Watchஇல் பள்ளிநேரத்தைப் பயன்படுத்தத் தொடங்குதல் என்பதைப் பார்க்கவும். |
ஸ்கிரீன் டைம் | பெற்றோர் கட்டுப்பாடுகளை நிர்வகிக்கலாம், உங்கள் சிறாரின் திரை நேரம் பற்றிய புள்ளிவிவரங்களைப் பெறலாம், வரம்புகளை அமைக்கலாம். உங்கள் சிறாரின் சாதனத்தில் பெற்றோர் கட்டுப்பாடுகளைப் பார்த்தல் என்பதைப் பார்க்கவும். |
செயல்பாடு | இளம் பயனர்களுக்காக உருவாக்கப்பட்ட ஃபிட்னஸ் அனுபவத்தை நிர்வகிக்கலாம். |
App Store | தானியங்குச் செயலி பதிவிறக்கங்களையும் புதுப்பிப்புகளையும் நிர்வகிக்கலாம். Apple Watchஇல் உள்ள App Storeஇல் செயலிகளைப் பெறுதல் என்பதைப் பார்க்கவும். |
தொடர்புகள் | நம்பகமான தொடர்புகளைத் தேர்வுசெய்யலாம். |
இடம் அறி | அறிவிப்பு அமைப்புகளை மாற்றலாம். |
கை கழுவுதல் | கட்டுப்பாடுகளை நிர்வகிக்கலாம், கைகழுவும் டைமரை ஆன் அல்லது ஆஃப் செய்யலாம். |
உடல்நலம் | உடல்நல விவரங்களையும் மருத்துவ ஐடியையும் சேர்க்கலாம் மற்றும் திருத்தலாம், நிர்வகிக்கப்படும் Apple Watchஐப் பயன்படுத்தும் நபரின் உடல்நலத் தரவைப் பார்க்கலாம் (சரியான அனுமதிகளும் அமைப்புகளும் இருந்தால்), உடல்நலத் தரவைப் பகிரும்படி கோரலாம், உடல்நலத் தரவைப் பெறுவதை நிறுத்தத் தேர்வுசெய்யலாம். |
இதயம் | நிர்வகிக்கப்படும் Apple Watchஐப் பயன்படுத்தும் நபரின் இதயத் தரவை (முறையான அனுமதிகள் மற்றும் அமைப்புகளுடன்) பார்க்கலாம். இதயத்துடிப்பு, இதயத்துடிப்பு மாறுபாடு, ஓய்வுநேர இதயத்துடிப்பு, நடக்கும்போதான இதயத்துடிப்பின் சராசரி ஆகியவை இதிலடங்கும். |
Mail நாட்காட்டி | குடும்ப உறுப்பினரின் கணக்கைச் சேர்க்கலாம், Apple Watch எவ்வளவு அடிக்கடி நாட்காட்டி அறிவிப்புகளைப் பெற வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யலாம். |
மெசேஜஸ் | டிக்டேஷன் விருப்பங்களைத் தேர்வுசெய்யலாம், ஸ்மார்ட் பதில்களைத் திருத்தலாம். |
இரைச்சல் | சுற்றுப்புற ஒலி அளவீடுகளை ஆன் அல்லது ஆஃப் செய்யலாம் மற்றும் இரைச்சல் வரம்பை அமைக்கலாம். |
ஃபோட்டோஸ் | வாட்ச்சை நிர்வகிக்கப் பயன்படுத்தப்படும் iPhoneஇல் இருந்து ஒரு புகைப்பட ஆல்பத்தைத் தேர்ந்தெடுத்து, Apple Watch காட்டக்கூடிய புகைப்படங்களின் எண்ணிக்கையைத் தேர்ந்தெடுக்கவும். |
வாலெட் Apple Pay | Apple Cash மற்றும் எக்ஸ்பிரஸ் டிரான்ஸிட் கார்டுகளை அமைக்கலாம். |
குறிப்பு: Apple Watchஇல் நீங்கள் உங்களுக்காக அமைக்கும் அனைத்து அம்சங்களும் நிர்வகிக்கப்படும் Apple Watchஇல் கிடைக்காது. குடும்ப உறுப்பினருக்காக Apple Watchஐ அமைத்தல் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும். உங்கள் சிறார்களுக்கான Apple Watch அம்சம் சில நாடுகள் அல்லது வட்டாரங்களில் கிடைப்பதில்லை. ஆதரவுள்ள நெட்வொர்க் வழங்குநர்கள் உட்பட, கிடைக்கும் தன்மை குறித்த தகவல்களுக்கு, Apple Watch GPS + Cellular என்பதைப் பார்க்கவும்.