iPadக்கான WhatsApp, WhatsApp இல் நீங்கள் விரும்பும் அனைத்து அம்சங்களையும் பெரிய திரைக்குக் கொண்டு வருவதால், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதும், ஒருங்கிணைந்து பணியாற்றுவதும் இன்னும் எளிதாகிறது.
அனைத்துச் சாதனங்களிலும் தனியுரிமை பாதுகாக்கப்படுகிறது:
உங்கள் சாதனங்கள் எதிலிருந்தும் WhatsAppஐ அணுக நம்பகமான, பாதுகாப்பான வழியை iPad செயலி வழங்குகிறது. எப்போதும் போல, உங்கள் தனிப்பட்ட மெசேஜ்களும் அழைப்புகளும் பேசுவோர் இடையே ரகசியம் காக்கப்படுகின்றன, அதாவது உரையாடலுக்கு வெளியே உள்ள எவராலும், ஏன் WhatsApp கூட அவற்றைப் படிக்கவோ, கேட்கவோ, பகிரவோ முடியாது.
இணைத்திடுங்கள், ஒன்றிணைந்து செயல்படுங்கள்:
- உங்கள் தொடர்புகள் மற்றும் பிசினஸ்களுடன் தொடர்ந்து உரையாடலாம்
- அழைப்பு இணைப்பு மூலம் மற்றவர்களை அழைப்பது உட்பட 32 பேர் வரை குரல் அழைப்புகளை மேற்கொள்ளலாம்
- நீங்கள் அழைப்பில் இருக்கும்போது உங்கள் திரையைப் பகிரலாம்
- ஆவணங்கள், படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பலாம், பெறலாம்
- உங்கள் iPadஐப் பயன்படுத்தும் எவரும் பார்க்க முடியாத வகையில் குறிப்பிட்ட உரையாடல்களைப் பூட்டலாம்
- நிகழ்வுகள் மற்றும் கருத்துக்கணிப்புகளை நேரடியாக உங்கள் உரையாடல்களில் உருவாக்கலாம்
iPadக்காகப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது
- ஒரே நேரத்தில் பல செயலிகளைப் பார்க்க, ஸ்டேஜ் மேனேஜர், ஸ்பிளிட்வியூ மற்றும் ஸ்லைடு ஓவர் போன்ற iPad iOS அம்சங்களை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
- வெளிப்புற விசைப்பலகைகள் மற்றும் Apple Pencilஐப் பயன்படுத்தலாம்